கலையும் தடையும் – ஒரு சாமானியனின் பார்வை

கலையும் தடையும் - ஒரு சாமானியனின் பார்வை கட்டுரைகள், கதைகள், கவிதைகள், திரைப்படங்கள், கலைப்படைப்புகள் சமூக மாற்றங்களை வலியுறுத்தியும் சீர்கேடுகளுக்கு எதிராகக் குரல் உயர்த்தியும் சிறந்ததோர் ஊடகமாக இருந்து வந்தன. சங்ககாலத்தில் இயல் இசை நாடகமெனும் முப்பரிமாண முறைமையில் மன்னர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தவும், சீர்மிக்க செயல்களைப் பாரட்டவும் செய்தனர் கற்றறிந்த புலவர் பெருமக்கள்.

சமீபத்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் ஆங்கிலேயர்களை எதிர்த்த விடுதலைப்போரில் பாட்டுத்திறத்தால் அந்நியனைப் பதறவைத்த பாரதியார், பேச்சாற்றலால் ஆங்கிலேயருக்கு பெரிதும் அச்சம் தந்த சொல்வேந்தர் தீரர் சத்தியமூர்த்தி, எழுத்தாற்றலால் மக்களுக்கு எழுச்சியூட்டிய திருவிக ஆகியோர் சட்டென்று நினைவுக்கு வரும் சிலர். நாடகத்தின் மூலம் தேசிய விடுதலைக் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைத்த பெருமக்களில் சங்கரதாஸ் சுவாமிகள் முதலிடம் வகிக்கிறார்.

திரைப்படம் வந்த காலத்தே அத்துறையை ஆக்கிரமித்த பலரும் ஆகாத நோக்குடையோருக்கு அடிவருடிகளாக அமைந்த போதும் தெய்வ – தேசிய சிந்தனைகள் போற்றும் திரைப்படங்களுக்குத் தமிழில் பஞ்சமில்லை. திராவிட இயக்கச் சிந்தனைகள் தன்னிரக்கம் மிகுந்ததாக இருந்தமையால் மேற்கத்திய முறைகளைப் போற்றுவதும் நம் சமுதாயத்தின் சிக்கல்களை மட்டுமே பறைசாற்றுவதும் சில மேற்கத்திய கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிப்பதுமான சில படைப்புகள் வரத்துவங்கின. முற்போக்கு என்ற பெயரில் அவை போற்றப்படவும் கண்டோம். குறிப்பாக ஹிந்து மதத்தின் வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியன குறிவைத்துக் கேலி செய்யப்ப்பட்டன.

திரைப்படங்கள் கதைகள் கட்டுரைகள் மூலம் ஹிந்து சமுதாயத்தைப் பழிப்பது சமீப காலமாக 1990களுக்குப் பிறகு மிகவும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஆண்டாள் (சூடிக்கொடுத்த சுடர்க்கொடி) வரலாறு குறித்த ’மறுவாசிப்பு’ என்ற பெயரில் தன் மனவக்கிரங்களை எழுத்தில் வடித்து வைத்த கேவலமும், அதே போன்று மன்மதன் அம்பு திரைப்படத்தில் வந்த பாடலும் இரு உதா’ரணங்கள்’.

இவற்றை எதிர்த்துப் போராடிய இந்து அமைப்பினர் அமைதியான முறையில் கடிதங்கள், தந்திகள், மின்னஞ்சல்கள் மூலமும், நேரடிப் பேச்சுவார்த்தை மூலமும் தம் எதிர்ப்பைத் தெரிவித்தது வரலாறு. நாடகங்கள் ஆகிய ஆனால், தற்போது திரைக்கு வந்தும் வராத விஸ்வரூபம் என்ற திரைப்படம் குறித்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட மதக் குழுவினர் நடந்து கொண்ட முறையும், அரசு நடந்து கொண்ட விதமும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்கிறது. நாங்கள் விரும்பாத வகையில் எது நடந்தாலும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கவும் தயங்கமாட்டோம் என்று ஒரு குழுவினர் மதத்தின் சார்பில் நின்று மாநிலத்தின் அரசை மிரட்டுவதும், அதை மறுபேச்சின்றி ஏற்ற மாநில அரசுத் தலைமை சம்பந்தப்பட்ட படைப்பைத் தடை செய்து பேசித்தீர்த்துக் கொள்வீர் என்று அறிவுறுத்துவதும் இதுநாள் வரை வரலாறு அதிகம் கண்டதில்லை நம் நாட்டில்.

சற்றே இந்தக் குழுவினரின் செயல்பாடுகளை அவதானித்தால் ஒரு பாங்கு தென்படும். இவர்களைச் சேர்ந்த யாரும் உலகில் எந்த மூலையில் இருக்கும்  சல்மான் ருஷ்டி  எதையும் எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் முயல்வதும், நம் நாட்டில் இருப்போர் அதை மறு பேச்சின்றி ஏற்பதும் தேச நலனுக்கு ஒவ்வாத விஷயம். சல்மான் ருஷ்டி என்றொரு எழுத்தாளர் சாத்தானின் கவிதைகள் என்றொரு புத்தகம் எழுதினார். அவரது தலை கொய்யப்படவேண்டும் என்று ஈரானிய மதத் தலைவர் அறிவித்தார். நம் அரசு சிறுபான்மையினர் ஓட்டு வங்கி என்ற வட்டத்தில் சிக்கிச் சுழல்வதால் மயிரிழைகளையும் மூடிக்கொண்டு இந்தியப் பிரஜையான ருஷ்டியை நாட்டை விட்டு அனுப்பிவிட்டது.

100 கோடி மக்களை 15 நிமிடங்களில் கொல்வேன் என்று கொக்கரித்த அக்பருதீன் ஒவைசி மீது நடவடிக்கை எடுப்பதில் அதீதத் தயக்கம் அரசுக்கு. லே கயா சதாம் என்றொரு திரைப்படம். இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் சுலபமான விவாகரத்து முறைகள் எத்தகைய சமூகச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்று சற்றே ஆய்வு செய்திருக்கும் வகையான திரைக்கதை. இது இஸ்லாமிய சட்டதிட்டங்களைத் தவறாகச் சித்தரிக்கிறது என்று அப்துல் சத்தார் ரிஸ்வி என்ற மௌல்வியால் ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டது. தாம் படத்தைப் பார்க்கவில்லை என்றும் ஆனால்  அக்பருதீன்  ஒவைசி கேள்விப்பட்ட வரையில் அது இஸ்லாமுக்கு எதிரானதாக இருப்பதாகவும் அதனால் இஸ்லாமிய சட்டப்படி திரைப்படத்துக்குத் தடை விதித்ததாகவும் அந்த மௌல்வி சொல்கிறார். படத்தின் இயக்குநர் அம்ஜத் கான் கொல்கத்தாவில் வசிக்கிறார், அவருக்குக் கொலை மிரட்டல்கள் வருகிறதாம். தாம் தவறேதும் செய்யவில்லை என்றும் காவல்துறை தம்மைக் காப்பாற்றும் என்று நம்புவதாகவும் அஞ்சிக் கதறுகிறார். (http:// www.rediff.com/news/report/fatwa-against-le-gaya-saddam-director-defends-film/20121105.htm)

அமெரிக்காவில் ஒருவன் முகமது நபியைப் பழித்துப் படமெடுத்தான் என்று சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்பாட்டம் செய்த இவர்கள் பல வாகனங்களைச் சேதப்படுத்தினர். இதே காரணத்திற்காக மும்பையில் நடந்த ஆர்பாட்டத்தில் அமர் ஜவான் ஜோதி என்ற உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. குற்றவாளிகள் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அரசு சிறுபான்மை ஓட்டுக்களை எண்ணி எதுவும் செய்யாதிருக்கிறது. (http:// www.mid-day.com/news/2013/feb/020213-azad-maidan-violence-rioters-hid-inside-retired-acps-home.htm)

மிக்கி மவுஸ் என்ற சித்திரக் கதாபாத்திரம் சாத்தானின் தூதுவன் எனவே அதைக் காட்டுவோரும் பார்ப்போரும் இஸ்லாமுக்கு எதிரானவர்கள என்று சவூதி அரேபியாவில் ஷேக் முகமது முனாஜித் என்றொரு மௌல்வி ஃபத்வா கொடுத்துள்ளார், (http://www.express.co.uk/posts/view/61629/Mickey-Mouse-facing-fatwa)

இந்தோனேசியாவில் ‘?’ என்று ஒரு திரைப்படம் வந்தது. பல்வேறு கலாச்சாரக் குழுக்கள் வாழுமிடத்தில் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துத்தான் வாழவேண்டும் என்ற கருத்து படத்தின் அடிப்படை. அது இஸ்லாமுக்கு எதிரானது என்று ஆர்பாட்டம் வன்முறை என்று கிளம்பிவிட்டார்கள்.( http://www.asianews.it/news-en/Muslim-extremists-against-movie-that-promotes- tolerance-and-dialogue-22487.html)

விஸ்வரூபம் திரைப்படம் இவர்கள் சொல்லுக்கு மாறாக வந்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்ற நிலை. இவர்களின் மிரட்டலுக்குப் பணிந்து திரைப்படம் எடுத்த நடிகர் கமலஹாசனும் பல மாற்றங்களைச் செய்யச் சம்மதித்துத் தன் திரைப்படத்தை வெளிக் கொண்டுவர முயல்கிறார். தமிழக அரசு பாதுகாப்புத்தர போதிய வச்திகள் இல்லை. ஆள்பலம் இல்லை என்கிறது. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை வரக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட காவற்படை காவல் காக்க முடியவில்லை என்பது வருத்தமும் எதிர்காலம் குறித்த அச்சமும் தரும் விஷயம். இது இப்படியே ஏற்க வேண்டிய நிலைப்பாடு அல்ல.

இவர்களை சற்றே விலகியிருக்கச் செய்யும் கடமை அரசுக்கு இருக்கிறது. ஏனெனில் நாட்டில் இவர்கள் விருப்பப்படி எல்லாம் நடக்க இவர்கள் மட்டுமே குடிமக்கள் இல்லை. எல்லா நேரங்களிலும் ஒரு குழிவினரை மட்டும் ஆற்றுப்படுத்துவது என்பது முதலைக்குத் தீனி போட்டு அது தன்னைத் தின்னாது என்று நம்புவதைப் போன்ற முட்டாளதனம். இது போன்ற சீர்கேடுகளில் இருந்து நாடு விடுபட்டு முன்னேற்றப்பாதையில் பயணிக்க முதுகெலும்பு எஃகினால் செய்யப்பட்ட தலைமையே இப்போது நாட்டுக்குத் தேவை.

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...