இறுகிய மீனாக சீனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறதா இந்தியா

 இறுகிய மீனாக சீனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறதா  இந்தியா பாகிஸ்தானில் உள்ள 'குவடார்' என்னும் துறைமுகம் இதுவரை சிங்கப்பூரைச் சேர்ந்த பி.எஸ்.எ .என்னும் தனியார் நிறுவனத்தினால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. சகல துறைமுகம் சம்பந்தப்பட்ட வேலைகளும் அந்த நிறுவனத்தின் ஊடாகவே நடைபெற்று வந்த வேளையில்,நிர்வாகத் துறையிலும் தொழில் நுட்பத் துறையிலும் சிறந்த நிறுவனமான அந்த

நிறுவனத்தை எதுவித தகுந்த காரணமும் இன்றி இடை நிறுத்திவிட்டு சீன நிறுவனம் ஒன்றுக்கு அந்தப் பொறுப்பு முழுவதையும் மாற்றியுள்ளது பாகிஸ்தான் அரசு.

இந்தச் சீன நிறுவனமானது சீனாவின் பாதுகாப்பு துறையோடு நெருங்கிய உறவுள்ள ஒரு நிறுவனம் மட்டுமன்றி..பெரும்பாலும் சீனர்களையே தனது நிறுவனத்தில் வேலைக்கு வைத்துள்ள ஒரு நிறுவனம் ஆகும்.ஏற்கனவே பங்களா தேசில் ஒரு துறைமுகத்தை அமைக்கும் வேலைகளில் சீனா விரைவில் ஈடுபடவிருக்கிறது என்பது அடுத்த அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்..

அந்த துறைமுகத்துக்கான ஒப்பந்தமும் சீனாவின் கையிலேயே இருக்கிறது.என்பதுடன் இலங்கையிலும் ஏற்கனவே சீனா பல இடங்களில் கால் பதித்துள்ளது.குறிப்பாக இலங்கையிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக அம்பாந்தோட்டையை கட்டி எழுப்பும் பணியை சீனா செய்து வருகிறது.

தென்னாபிரிக்காவில் உற்பத்தியாகும் நிலக்கரி,
போன்ற பொருளாதாரக் கட்டமைப்புக்கு தேவையான மூலப் பொருட்களை சீனா ஏற்கனவே தனதாக்கிக் கொண்டது மட்டும் இன்றி ,பர்மாவிலும் கால்பதித்து சீனாவில் இருந்து தரை,கடல் மூலம் ஒரு விநியோகப்பாதையை யும் எபடுத்தியுள்ளது.

எரிவாயு, நிலக்கரி போன்ற மூலப்பொருட்களுக்கு மிக நீண்ட காலம் இனி சீனா வேறு எங்கும் போகத் தேவை இல்லை என்னும் அளவுக்கு
அதைப் பெறும் வழி வகைகளையும் எளிதாக அவற்றை கொண்டு செல்லும் விநியோகப் பாதையையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த வேளையில் பாகிஸ்தானின் துறைமுகமும் பங்களாதேசின் துறைமுகமும் அதன் கைகளில் விழுந்திருக்கிறது.

அமெரிக்காவின் முந்தானைக்குள் ஒழியும் எண்ணத்தோடு காய்களை நகர்த்திவரும் இந்தியாவுக்கு இனி  பாகிஸ்தானுடன் இணைந்து சீனா பேரிடியைத் தரப்போகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.அதற்கு 'போனசாக' பங்களாதேசின் துறைமுக வேலைகளும் சீனாவுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

சீனாவின் அண்மைக்கால நகர்வுகளைக் கூட்டிக் கழித்துப் பாருங்கள் சீனாவின் உண்மை முகம் எதுவென்று புலனாகும்.ஆபிரிக்காவில் இருந்து பர்மா, பாகிஸ்தான் ,பங்களாதேஷ், இலங்கை என்று உலகின் ஒரு பெரிய அரை வட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளது சீனா.தனது நீண்டகால உற்பத்திகளுக்கும் ராணுவ தளபாட உற்பத்திக்கும் வர்த்தகத்துக்கும் மிகச் சிறந்த திட்டத்தை சீனா போட்டிருப்பது புலனாகிறது.இது வெறும் பொருளாதாரம் சம்பந்தப் பட்ட விஷயம் மட்டும்தானா? .

இல்லை..அதன் பின்னணியில் ராணுவ நலன்களே பெருமளவில் ஒழிந்திருக்கிறது என்பதை எந்த ராணுவ விமர்சகர்களும் புரிந்து கொள்வர்.சீனாவின் முந்தானைக்குள் ஒழிந்துகொண்டு இனி பாகிஸ்தானால் இலகுவில் இந்தியாவை நோக்கி வாலாட்டமுடியும் என்பதையே குவடார் துறைமுகம் சீனாவுக்கு கைமாறிய சம்பவம் உணர்த்துகிறது.

இனி ஒரு ரானுவீரனின் தலையை மட்டுமன்றி ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளையும் இலகுவில் கொண்டுசென்று சீனாவிடம் ஒப்படைக்கும் மன உறுதியை இதன்மூலம் பாகிஸ்தான் பெற்றுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.உலகநாடுகள் பலவற்றுக்கு (இலங்கை உட்பட) மிக வலுவுள்ள, கொடிய ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துவரும் சீனாவுக்கு 1960 களில் இந்தியாவோடு மோதும்போது இருந்த ராணுவ பலத்தைவிட பத்துமடங்கு ராணுவ-ஆள் பலம் உள்ளது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

சண்டை என்று ஒன்று வரும்போது இந்தியா சீனாவால் நிச்சயம் மிக இலகுவில் சுற்றி வளைக்கப்படும் சூழ்நிலையிலேயே இந்தியா இன்று உள்ளது.நாடுகளின் யுத்தத்துக்கு (கழத்தை சுற்றி சீனாவின் கைகள்தான். ) இலகுவான விநியோகம் மிகவும் முக்கியமானது .இந்தியாவைச் சுற்றியுள்ள பலநாடுகளில் வலை விரித்ததுபோல் துறைமுகங்களை தனது கையில் வைத்திருக்கும் சீனாவுக்கு அது மிக இலகுவான ஒன்றே.

இந்தியாவுக்கு வரும் ராஜபக்சா இந்தியாவின் பக்கம் நிற்பான் என்று இந்தியா கனவு காணக்கூடாது.அப்படி இந்தியாவின் பக்கம் நிற்பான் என்றால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கொடுத்திருக்கமாட்டான் ராஜபக்சா..விழுந்த மாட்டுக்கு குறி சுடுவதில் வல்லவன் அந்தச் சிங்கள எதேச்சாதிகாரி என்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது.

சீனாவின் வேகமான நகர்வுகளின் பின்னணியை இந்தியா ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் வருந்தப்படப் போவது இந்திய மக்கள்தான்.இதுபற்றி பெங்களூரில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் கருத்துக் கூறிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.திரு எ.கே.அந்தோனி குவாடர் துறைமுகத்தை சீனா கட்டி வருவது மிகவும் கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்டார். அது மட்டும்தான் அவரால் முடிந்தது.

சுமார் 600 இந்திய தமிழ் மீனவர்களை ஒரு சுண்டைக்காய் இலங்கை கொன்று குவித்தபோதும் அவருக்கு கவலை மட்டும்தான் வந்தது.அழுகைகூட வரவில்லை.வலைக்குள் இறுகிய மீனாக சீனாவின் பிடியில் சிக்கித் துடிக்கும்போதுகூட கவலை அளிக்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

நன்றி ; மு.வே.யோகேஸ்வரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...