கனையலால் மற்றும் சத்தியேந்திரநாத் போஸ் ஆகிய இருவரும் நாராயண் கோஸ்வாமியின் கால்களை ஆளுக்கொன்றாய் பிடித்து அவன் உடலை கிழித்தே கொன்ற வீர வரலாற்றினை கடந்த பதிவுகளில் பார்த்தோம்.
அப்ருவராகி, அரசாங்க ஆதரவு பெற்று விடுதலையாகலாம் என்று எண்ணிய துரோகியை நிரந்தர விடுதலை கொடுத்து உலகத்தை விட்டே அனுப்பி கொண்டிருந்த போது சத்தம் கேட்டு ஓடி வந்த அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து உதைத்தனர். சொல்ல முடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாகினர்,
நாராயண் கோஸ்வாமியை கொன்றதற்காக அவர்கள் மீது தனியாக ஒரு கொலை வழக்கு போட்டு இருவரையும் தனித்தனியே தூக்கிலிட்டனர்.
இவ்வளவுதானா வீரசாகஸம் ? பானர்ஜி என்ற போலிஸ் அதிகாரி அரசாங்கத் தரப்பில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்தார், வரும் போதே யாரோ ஒருவர் அவரை கோர்ட்டு வாசலிலேயே குருவி சுடுவது போல சுட்டுக் கொன்றுவிட்டார், சுட்டது யார் என்று கடைசிவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை வெள்ளைய போலிஸுக்கு!
செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்த போது சர்க்கார் தரப்பு வழக்கறிஞரான அசுதேஸ் பிஸ்வாஸை, சாரு சந்திர ராய் என்ற இளைஞன் சுட்டுவிட்டு , தூக்கு கயிற்றில் "வந்தே மாதரம்" என்று முழங்கிய படியே செத்துப்போனான், உயர்நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல வந்த சம்சுவ் ஆலம் என்ற டெபுடி போலிஸ் சூப்பிரண்டென்டை இன்னொரு சுத்த வீரன் சத்தமில்லாமல் கொன்றுவிட்டு , சாவு தனக்கு துச்சம் என்று சொல்லாமல் சொன்னான்.!
இப்படி வியப்புக்கு மேல் வியப்பு, திகைப்புக்கு மேல் திகைப்பு, என்று தொடர்ந்து கொண்டே போன இந்த அலிப்பூர் சதி வழக்கினை, ஆங்கில அரசு இ.பி.கோ. 121, 121A, 122, 123 ஆகிய செக்ஷன்களின் மீது தொடுத்து நடத்தினர்.
அரவிந்தருக்கும் , இதர எதிரிகளுக்கும் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஆஜராகி, அரசு தரப்பு வாதத்தினை பொடி பொடியாக்கினர், இவ்வளவுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் தங்களின் குற்றங்களை மறுக்கவோ மறைக்கவோ இல்லை,
இந்த வழக்கின் பிரதான குற்றவாளிகளில் ஒருவரான பரிந்திரகுமார் கோஷ் கொடுத்த வாக்குமூலம் ஒவ்வொரு இந்தியனும் எண்ணி எண்ணி பெருமை கொள்ளத்தக்க வீர காவியம் ஆகும்.. இது பற்றி அடுத்த பதிவுகளில் பதிவு செய்கிறேன்.
நன்றி ; ராம்குமார்
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.