இந்தியா மென்சக்தி

 பெரும் நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் ஒருசேர படர்ந்திருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போது நம்பிக்கையற்ற உணர்வை மக்கள் அடைகின்றனர். இருப்பினும் இந்தியா மிக காத்திரமான அளவில் உறுதியை வெளிப்படுத்தி வருகிறது. இந்த உறுதிப்பாட்டிலிருந்து தான் நம்பிக்கையின்மையை வென்று நம்பிக்கை எழுச்சி பெறுகிறது.

நமது நாட்டின் ஜனத்தொகையில் 60 சதவீதத்தினர் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வேளாண்மையை நம்பியுள்ளனர். வேளாண்மைத் துறை நமது நாட்டின் ஜிடிபிக்கு 16 சதவீதம் தான் பங்களிக்கிறது. சேவைத் துறைகளின் பங்கு ஜிடிபியில் 60 சதவீதத்தைத் தாண்டுகிறது. இந்தியாவில் சேவைத்துறை வளர்ந்துள்ளதற்கு காரணம் அரசுக் கொள்கையையோ, உள்கட்டுமானத்தையோ நம்பியிராததுதான். வேளாண்மைத் துறையில் நிலவும் வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்க அத்துறையிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மனித சக்தியை உற்பத்தி துறை அல்லது சேவைத் துறைக்கு இடமாற்றி விட்டதுதான் இப்போது நம்முன் நிற்கும் மிகப்பெரிய சவாலாகும்.

அரசியலின் தரம் நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் என்பது தேசத்தின் மீது தாக்கம் செலுத்துவதாக உள்ளது. அரசியல் தான் கொள்கையை உருவாக்குகிறது. இந்தியாவின் திசைப்போக்கை கொள்கைகள் தான் நிர்ணயம் செய்கின்றன. அரசியலின் சக்தி என்பது அளப்பரியதாகும். அரசியலை நிர்வகிக்கும் நபர்களின் மாண்பு என்பது மக்கள் எதிர்பார்க்கும் நல்ல நிர்வாகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டியது அவசியம். மோசமான நிர்வாகச் சூழல்நிலையிலும் இந்தியாவின் ஜிடிபி 9 சதவீதம் வளரமுடியும் எனில் நல்ல நிர்வாகம் என்பது இருப்பின் இந்தியாவின் வளர்ச்சியை எண்ணிப்பாருங்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் தன் ஒருங்கிணைப்பில் சீர்குலைவை சந்தித்து வருகிறது. பெருமளவிலான கட்சிகள் குடும்பங்களைச் சுற்றியுள்ள கூட்டமாக மாறிவிட்டன. சில கட்சிகளின்  பெருமளவிலான கட்சிகள் குடும்பங்களைச் சுற்றியுள்ள கூட்டமாக மாறிவிட்டன ஆதரவுநிலையை சாதி மட்டுமே தீர்மானிக்கிறது. அமைப்புரீதியான ஒழுங்கு இல்லாத கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பதைக் காணவே இயலாது. வாரிசுகள் தான் அடுத்தடுத்து தலைவர்கள் ஆவர். செயல்திறன் அடிப்படையிலான உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இருந்த நாம் வாரிசுரிமை சார்ந்த ஜனநாயகமாக பரிணாமம் அடைந்து வருகிறோம். இதுதான் அரசியலின் தரத்தில் திடீர் சீரழிவை ஏற்படுத்தி விட்டது. அடையாள அரசியல் முன்வரிசையைப் பிடித்துள்ளது. சாதிரீதியாக வாக்குகளைக் கவர கொள்கைகளில் சமரசம் செய்யவேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் கடந்தும் நம்பிக்கை கொள்வதற்கான காரணங்கள் இருக்கின்றன. இந்திய நடுத்தர வர்க்கம் என்பது விரிந்துவருகிறது. அபிலாசைகளும் எதிர்பார்ப்புகளும் கொண்ட மக்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் பொறுமையை படிப்படியாக இழந்துவருகின்றனர். பொதுமக்களின் கருத்துதான் அரசியலின் திசைப்போக்கை மாற்றும். குடும்பப் பெயர்கள் மற்றும் சாதி செல்வாக்குகளை எப்போது உண்மையான செயல்திறனும், நேர்மையும் இடம்பெயர்க்குமோ அப்போதுதான் இந்திய ஜனநாயகம் உண்மையான வலிமையைப் பெறும். அதுவே நிர்வாகத்தின் தரத்திலும் தாக்கத்தை செலுத்தும்.

கொள்கை முடக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு

நல்ல நிர்வாகத்துக்கு வலிமையான தலைமைத்துவம் தேவை. ஒரு கொள்கையையோ திட்டத்தையோ உருவாக்க மன உறுதிப்பாடு தேவை. தலைமைத்துவம் என்பது நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருத்தல் வேண்டும். அனைவரின் கருத்தொருமிப்பைச் சார்ந்ததாக இந்தியாவின் பொருளாதார மாதிரி மாறிவருகிறது. அடுத்த பத்தாண்டுகளுக்கு 9 அல்லது அதற்கும் மேற்பட்ட சதவீதத்தில் வளர்ச்சி தேவையாக உள்ளது. தொடர்ந்த 9 சதவீத வளர்ச்சி என்பது முதலீட்டை நோக்கியதாக இருக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அரசுக்கு பெரிய வருவாயைக் கொடுக்கும். அப்படி அதிகரிக்கும் வருவாயைப் பயன்படுத்தி உள்கட்டுமானத்தைப் பெருக்கலாம். சமூக மேம்பாட்டுக்கு செலவழிக்கலாம். வறுமை ஒழிப்புத் திட்டங்களை நிறைவேற்றலாம். துரதிர்ஷ்டவசமாக கடந்த சில ஆண்டுகளாக கொள்கை முடக்கத்தையும், அரசியல் தலைமைத்துவத்தின் நம்பிக்கை குலைந்துவருவதையும் பார்த்துவருகிறோம். இந்த நிலை மாறவேண்டும். வருவாய் அதிகரிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட நமது வறுமை ஒழிப்புத்திட்டங்கள் சமூக நோக்கங்கள் கொண்டதாகவும், மக்கள் தங்களுக்கென உடைமைகளை உருவாக்கும் வாய்ப்பைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். மனிதக்கழிவை மனிதர்களே அகற்றும் நிலையை ஒழிக்கவேண்டும். ஏழைகளை, குறிப்பாக பழங்குடிகளின் நிலை உயர வேண்டும். குறிப்பாக அவர்களது ஆரோக்கியம், கல்இ மற்றும் கிராமப்புற உள்கட்டுமானத்தை அதிகரிக்க வேண்டியது இப்போதையை அவசியத் தேவையாக உள்ளது.

9 சதவீத வளர்ச்சிவீதத்தை எப்படி அடைய முடியும்?

இந்தியா 9 சதவீதம் வளர்ச்சிவீதத்தை அடைவதற்கு உறுதிவாய்ந்த கொள்கை உருவாக்கம் அவசியம். உள்கட்டுமான உருவாக்கத்திலும் திறனும், மேம்பாடும் அவசியம். வெற்றிகரமாக வளர்ந்த தொலைத்தொடர்புத் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆகியவை ஊழலின் பிடியில் சிக்கியுள்ளன. புதிய லைசன்ஸ் ராஜ்ஜியத்தின் பெயராலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பெயராலும் எண்ணற்ற பெரிய முதலீடுகள் முடங்கியுள்ளது ஆரோக்கியமானதல்ல. பொருளாதாரமும், சூழலியலும் சேர்ந்துதான் ஜீவிக்க வேண்டும். உற்பத்தித் துறை சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மிகவும் அவசியமானது.

நுகர்வோர்கள் மலிவாக பொருட்களை வாங்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். குறைந்த செலவில் உற்பத்தி செய்வதுதான் வெற்றிக்கான திறவுகோல் ஆகும். வட்டிவிகிதங்களைக் குறைப்பது, உள்கட்டுமானத்தை மேம்படுத்துவது, ஆற்றல் துறை மேம்பாட்டை சரியாக நிறைவேற்றுவது ஆகியவற்றுடன் சேவைகளை சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் மலிவாக வழங்குவதும் இப்போதைய அவசியமாக உள்ளது.

நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள், விமான நிலையங்கள், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு போதுமான கவனத்தை அளித்தல் அவசியம். இந்தியா தனது சுற்றுலா வர்த்தக சாத்தியத்தை பயன்படுத்த முற்றிலும் தவறிவிட்டது. சுற்றுலா தொடர்பான தொழில்களுக்கு குறைந்த வரிகள், மேம்படுத்தப்பட்ட விமானநிலையங்கள், புகைவண்டி நிலையங்கள் மற்றும் மலிவான விடுதிகளை அமைத்து சுற்றுலா வருவாயைப் பெருக்க வேண்டும். உள்நாட்டுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் சரக்குகளின் போக்குவரத்துக்கு கெடுபிடி விதிக்காமல் தாராளம் காட்டுவது அவசியம்.

அதிக வரிவிதிப்பு என்பது தற்காலிகப் பலன்களையே தரும். ஒருபோதும் நீண்ட கால அடிப்படையிலான நன்மைகளை ஏற்படுத்தாது. சர்வதேச அளவில் ஒப்பிடத்தகுந்ததாகவும், கட்டுப்பிடியாகும் வகையிலும் வரிவிதிப்பு இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஏற்றுமதி நடைபெறும். ஏற்றுமதி மூலம் வரி வருவாய் கிடைக்கும். நாம் பல வெற்றிக்கதைகளைக் கண்டுள்ளோம். கல்வி வலைப்பின்னல், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மருந்து துறை, வாகனத்துறை, நெடுஞ்சாலை, நகர்ப்புற வீட்டுவசதித் துறை என எல்லாவற்றிலும் வளர்ச்சியைக் கண்டுள்ளோம். ஒரு புதிய கொள்கை வடிவோ, புதிய சட்டமோ இந்த வெற்றிகளை அதிகரிக்க வேண்டுமே தவிர தடுக்க முனையக் கூடாது.

கூட்டணி அரசுகள்

வல்லமை வாய்ந்த தலைவர்கள் மற்றும் அசுரப் பெரும்பான்மை கொண்ட அரசுகளின் காலம் முடிந்துவிட்டது. இன்று ஒரு கட்சி கூட தனித்த பெரும்பான்மையை பிடிக்கும் வாய்ப்பில் இல்லை. இந்தியாவின் அரசியல் திட்டம் என்பது மாறிவிட்டது. தொடக்க ஆண்டுகளில் சுதந்திரத்திற்குப் பின்னான காலகட்டத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டை பீடிக்கும் பிரச்னைகள் குறித்த கவலைகள் இருந்தன. இறையாண்மை என்பது பிரதான நோக்கமாக இருந்தது. தேசத்தின் இறையாண்மைக்கான அச்சுறுத்தல்கள் களையப்பட்டவுடன், பொருளாதார மேம்பாடு, வறுமை ஒழிப்பு மற்றும் பிராந்திய அளவிலான அபிலாஷைகள் வளர்ந்தன. இன்றைக்கு கூட்டாட்சி என்பது மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. மாநிலங்களில் செல்வாக்குடன் திகழும் பிராந்தியக் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்வது கூட்டாட்சியாக உள்ளது. இந்தக் கூட்டணியை ஒருங்கிணைத்து வழிநடத்துவது ஒரு தேசியக் கட்சியாக இருக்கிறது. அப்படி தலைமையேற்கும் கட்சிக்கு இயல்பாகவே மக்களவையில் அதிக இடங்கள் தேவையாக உள்ளது. புதுடெல்லியை யார் ஆள்வது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை பிராந்தியக் கட்சிகள் வைத்துள்ளன. ஒரு வெற்றிகரமான கூட்டணி ஆட்சியை நடத்த இரண்டு முக்கியப் பண்புகளை தேசியக் கட்சிகள் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய சக்திகளை கூட்டணியில் இணைக்க பெரியமனதுடன் திகழ்வது அவசியம். அதேபோல பிராந்தியக் கட்சிகளும் தேசிய அளவிலான பார்வை விரிவை அடைதல் அவசியம். அப்போதுதான் நல்ல நிர்வாகத்தை நிச்சயப்படுத்த முடியும்.

ஊழல்

நமது நிர்வாகத்தின் ஆதார உறுப்புகளை ஊழல் விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஊழல் முதலீடு செய்ய வருபவர்களை விரட்டுகிறது. ஊழலால் செலவு அதிகம் ஏற்படுகிறது. தொலைத் தொடர்புத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் வெற்றிகரமான வளர்ச்சி ஊழலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடால் ஆற்றல் உற்பத்தி துறை கடும் சிக்கலைச் சந்தித்து வருகிறது. 1991 இல் லைசன்ஸ் முறையை இல்லாமல் ஆக்கினால் ஊழல் இல்லாமலாகி விடும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள், ரியல் எஸ்டேட் பரிமாற்றங்கள், இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்தல், சுரங்கத் தொழில், மது வர்த்தகம், கல்வியில் தனியார்மயம் என எல்லாவற்றிலும் ஊழல் உச்சத்தில் உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பான விஷயங்கள் மர்மமாகவே நீடிக்கின்றன. லோக்பால் தொடர்பான சமீபத்திய விவாதத்தில் ஊழல் எதிர்ப்பு தீர்வாயத்தின் மூலம் லஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் தேவை என்று வலியுறுத்தப்பட்டது. ஊழல் தடுப்பு தீர்வாயத்திற்கான தேவையை பொதுமக்கள் அழுத்தமாக வலியுறுத்தினாலும், சுயேச்சையான செயல்திறன் மிக்க லோக்பாலைக் கொண்டுவருவதில் இந்திய அரசுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அரசு ஊழிர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கான அமைப்பின் சுயேச்சைத் தன்மை குறித்து பிரதானமாக சர்ச்சைகள் உள்ளன. ஒரு புலனாய்வாளருக்கு சிபிஐ இயற்கையான தேர்வாக இருக்க முடியும். இருப்பினும் சிபிஐயின் கட்டுப்பாடு மத்திய அரசினுடையதாக இருக்கமுடியாது. எப்படி சிபிஐ இயங்க வேண்டும் என்று மத்திய அரசால் உண்மையிலேயே தீர்மானிக்க முடியுமா? மத்திய அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் பரிந்துரை செய்ததன் அடிப்படையால் வழங்கப்பட்டுள்ள இறுதி வரைவில் நான் ஏற்கனவே முக்கியமான மாற்றங்களை முன்மொழிந்துள்ளேன்.

ஒரு சிபிஐ இயக்குனர் மீண்டும் அரசுத் துறையில் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. அப்போதுதான் சிபிஐ அமைப்பால் அச்சம் மற்றும் விருப்பு வெறுப்பின்றி பணிபுரிய முடியும். லோக்பாலின் சம்மதமின்றி ஒரு புலனாய்வு அதிகாரி நடுவிலேயே இடமாற்றம் செய்யப்படக்கூடாது. தவறு செய்த அரசு ஊழியர் தனது தரப்பைச் சொல்லும் வாய்ப்பை, விசாரணை தொடங்குமுன் லோக்பால் அனுமதிக்கக் கூடாது. லோக்பால் நியமனத்தில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படையில் அனுமதிக்கப்படாது.

நியாயமான நேர்மையான சமூகத்தை உருவாக்க

சாதி மற்றும் மத அடிப்படையிலான சமூக பதற்றங்கள் அகற்றப்பட வேண்டும். சமூகங்களுக்கு இடையிலான தொடர்ந்த உரையாடல் அவசியம். சமூகங்களுக்கு இடையிலான உறவைப் பாதிக்கும் விவகாரங்களில் கருத்து சொல்வதில் கவனம் வேண்டும். ஒரு முதிர்ந்த சமூகத்திற்கு லட்சணங்களாக இருப்பவை நியாயமும், அன்பும்தான். தேசத்தின் தலைநகரில் சமீபத்தில் நடந்த பாலியல் வல்லுறவு நமது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஒரு சம்பவமாகும். இன்றும் பெண்கள் சுரண்டலுக்கான கருவியாகக் கருதப்படுகின்றனர். அந்த இளம்பெண் மீது நடத்தப்பட்ட வன்முறை மிருகத்தனமானது. நாகரீக சமூகமாக இந்தியா தோற்றுவிட்டது.

நமது நாட்டில் பட்டியில் சாதியினரும், பழங்குடியினரும் இன்னும் மோசமான நிலையில் வாழ்கின்றனர். சமமான அந்தஸ்து இல்லாத மக்களுக்கு சம அந்தஸ்தை உருவாக்க ஊக்குவிக்க வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைதான் இட ஒதுக்கீடு. வரலாற்றுரீதியாக நடந்த அநீதியைக் களையும் முயற்சி.

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சகிப்பின்மை இன்னொரு புதிய போக்காக உருவாகியுள்ளது. ஒரு பேச்சுக்கு அல்லது ஒரு சினிமாவுக்கு எதிரான போராட்டம் ஒரு சமூகத்தை அச்சுறுத்தலில் ஆழ்த்தக் கூடாது. அதேபோல பொதுவெளியில் ஒருவர் தனது வார்த்தைகளையும், உரைகளையும் யாரையும் புண்படுத்தாதவாறு, தூண்டாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம். ஊழலில் அதிகம் பங்களிப்பவர்கள் என்று சில குறிப்பிட்ட சாதிகளைக் குற்றம்சாட்டுவதை நான் ஏற்கவில்லை. ஊழல் என்பது சமூகத்தைச் சமனப்படுத்தும் சக்தியாகவும் நான் பார்க்கவில்லை. சுதந்திரமான பேச்சுரிமையைக் காப்பாற்றும் அதே நேரத்தில் அரசியல் சாசன ரீதியாக வலியுறுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்துப் பேச்சுரிமையைக் காப்பது அவசியமாகிறது.

தீவிரவாதம்

எல்லை தாண்டிய அளவிலானதும், உள்நாட்டிலும் இந்தியா பல தீவிரவாத இயக்கங்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. பிரிவினைக் காலத்திலிருந்தே, காஷ்மீரை தனது அரசியல் திட்டத்தின் ஒருபகுதியாக பாகிஸ்தான் வைத்துள்ளது. இந்தியாவின் ஓரங்கமாக காஷ்மீரை பாகிஸ்தான் கருதவேயில்லை. பாகிஸ்தான் சம்பிரதாய வகையில் போரையும், கடந்த இரு தசாப்தங்களாக எல்லைப்பகுதி தீவிரவாதத்தையும் நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவுக்குள்ளேயே சில அமைப்புகளை ஊக்குவித்து, தீவிரவாதத்தை வளர்த்துவருகிறது.

புவி எல்லைகளை மறுவரைவு செய்யும் காலம் முடிந்துவிட்டது என்பதை பாகிஸ்தான் உணரவேண்டும். இந்தியாவைக் காமாலைக் கண்ணால் பார்த்துப் பிரச்னைகளைத் தொடர்வதைவிடத் தன் நாட்டுக்குள் உள்ள பிரச்னைகளைச் சீர் செய்ய பாகிஸ்தான் முயல வேண்டும். இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல், 26/11 மும்பை தாக்குதல், சமீபத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தலையைத் துண்டித்தல் என்று பாகிஸ்தான் அரசின் அதிகார வரம்புக்குள் இயங்கும் அமைப்புகளால் தொடர்ந்து பயங்கரங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இன்று பாகிஸ்தானின் ராணுவம், ஐஎஸ் உளவுத்துறை, அரசு என ஒவ்வொன்றும் சுயேச்சையான செயல்திட்டங்களுடன் இயங்கும் நிலை உள்ளது. அரசுக் கொள்கையாக தீவிரவாதத்தை வைத்திருப்பதை பாகிஸ்தான் கைவிட்டால்தான் அமெரிக்கா அல்லது இந்தியாவுடனான உறவுகள் சரியாகும்.

பாகிஸ்தான் தன்னை வேகமாகச் சுதாரித்துக்கொண்டு தீவிரவாதப் போக்கைக் கைவிட்டால் பாகிஸ்தானின் மக்கள் அரசுக்கு வலு கூடும். அரசு மற்றும் அரசு அல்லாத தீவிரவாதம் மட்டுப்படுத்தப்படும் போதுதான் பாகிஸ்தானுடன் தீவிரமானதும், வெற்றிகரமானதுமான உறவு ஏற்படும்.

இந்தியாவின் தவிர்க்க முடியாத அங்கம் காஷ்மீர் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். காஷ்மீரின் அரசியல் சாசனப் பங்கைத் தீர்மானிப்பதிலும், மற்ற மாநிலங்களுடனான அதன் உறவைத் தீர்மானிப்பதிலும் நாம் வரலாற்றுத் தவறுகளைப் புரிந்துள்ளோம். இருப்பினும் தற்போது காஷ்மீர் மக்களை நம் சார்பாக வைத்துக்கொண்டே தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவது அவசியமானது. காஷ்மீர இளைஞர் சமூகம் பல அபிலாஷைகளுடன் உருவாகிவருகிறது. நமது கொள்கைகள் மக்களுக்கு எதிரானவையாக இருக்கக் கூடாது. அதே சமயம் அவை பிரிவினைவாதத்துக்கு எதிராகவும் இருத்தல் அவசியம்.

மாவோயிசத் தீவிரவாதம் என்பது இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும். நாட்டின் இதயப் பகுதியாக இருக்கும் 200 மாவட்டங்கள் அவர்களின்மாவோயிசத் தீவிரவாதம் கட்டுப்பாட்டில் உள்ளன. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கான ஆதரவுத்தளம் அதிகமாக உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளங்களை அனுபவிக்கும் உரிமை பழங்குடிகளுக்கே இருக்க வேண்டும். இந்தப் பகுதிகள் பொருளாதார நிலையில் முன்னேறாத பகுதிகளாக இருப்பவை. மாவோயிஸ்டுகள் பரவியிருக்கும் பகுதிகளில் சிலவற்றில் நிலக் கண்ணி வெடிகள் மற்றும் ஆயுதம் தாங்கியவர்கள் இருப்பதால் அங்கு நுழைவதே சாத்தியமில்லாத நிலை உள்ளது. மாவோயிஸ்டுகள் சமூக சீர்திருத்தவாதிகள் அல்ல. மாவோயிசம் வறுமை ஒழிப்புக் கொள்கையுடதும் அல்ல. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தூக்கி எறிவதற்கான முயற்சியே மாவோயிசம். மாவோயிஸ்டுகள் பயன்படுத்தும் பெரும்பாலான ஆயுதங்கள் இந்தியப் பாதுகாப்பு படையினருடையவை. மாவோயிஸ்டுகள் செல்வாக்கிலிருந்து மாவோயிஸ்டு பகுதிகளைக் காப்பதற்கு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு என இரண்டு வகையிலும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அவசியம்.

மக்கள் தொகை ஒரு வளம்

இந்தியா இளம் தலைமுறையினர் நிறைந்துள்ள நாடாகும். மக்கள்தொகை அடிப்படையிலான சலுகை மட்டும் போதாது. வளர்ந்த நாடுகளுக்கு ஆள்பற்றாக்குறை பிரச்னை உள்ளது. அவர்களிடம் உள்ள குறைந்த மக்கள்தொகையைக் கொண்டு அங்குள்ள பொருளாதாரங்கள் தாக்குபிடிக்க முடிவதில்லை. நடுத்தர வர்க்கத்தினரும், அபிலாசைகள் உள்ள வகுப்பாரும் இந்தியாவில் வளர்ந்துவருகிறார்கள். இந்நிலையில் கல்வியும், மனித வளமும் இரட்டிப்பாகும் சூழ்நிலையில், நன்கு பயிற்சி பெற்ற மூளைத்திறன் உள்ளோர் ஒரு மடங்கு கூடுதலாக நம்மிடம் உருவாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளுக்கு அவர்கள் தேவை. நாம் நமது பெருகும் மக்கள்தொகையை பொருளாதார வளமாக மாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள்தொகைக்கும் நமது நாட்டின் மக்கள்தொகைக்கும் இடையிலான வித்தியாசம் இதை சாத்தியப்படுத்தும்.

இந்தியா மென்சக்தி

இந்தியாவின் நாகரீகம், நமது வரலாறு, நமது கலாசாரம், நமது மக்கள் தொகை, விளையாட்டு, இசை, சினிமா, இலக்கியம் ஆகிய பல துறைகளில் நமது உலகளாவிய அடையாளங்கள் ஆகியவை இந்தியாவை ஒரு மென்சக்தியாக மாற்றியுள்ளது. இக்காலகட்டத்தில் இந்தியா சந்திக்கும் சவால்களில் சிலவற்றையே  நான் விரிவாகப் பேசியுள்ளேன். நான் பேசியதன் அடிப்படையில் நமது திட்டங்கள் இருந்து, நமது வளங்களை நாம் சரியாகப் பயன்படுத்தினால், நமக்கு இப்போதிருக்கும் நம்பிக்கையின்மை தொடர்ந்து நீடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...