ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தவருக்கும் எதிரானவராகவும், மத சகிப்புத்தன்மை அற்றவராகவும் , நரேந்திர மோடியை காட்ட முயன்ற ஒரு சில ஊடகங்கள் மற்றும் போலி மத சார்பின்மை வாதிகளின் முகத்தில் கரியை பூசி , நரேந்திர மோடியின் நிர்வாக திறமைக்கும், உண்மையான வளர்ச்சி திட்டத்துக்கும் சலாம் போட்டு, வெற்றி கனியை பரிசாக தந்துள்ளது 90 சதவீதம் இஷ்லாமியர்களை மட்டுமே பெரும்பான்மையாக கொண்ட சலாயா நகராட்சி.
அண்மையில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்கான அதிர்வே இன்னும் அடங்காத நிலையில் . மற்றும் ஒரு மாபெரும் வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக பெற்றுள்ளது. மொத்தமுள்ள 76 நகராட்சிகளில் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள ஹல்வாத் மற்றும் போர்பந்தரில் உள்ள குட்டியானா ஆகியவற்றில் பாஜக. போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டது.
மீதமுள்ள 74 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் 47-ஐ பாஜக கைப்பற்றியுள்ளது. சென்ற முறை 19 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி , தற்ப்போது ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதில் குறிப்பாக சௌராஷ்டிராவின் ஜாம்நகர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக (90 சதவிதம்) வசிக்கும் சலாயா நகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.அந்த நகரசபையில் உள்ள.27 வார்டுகளில் 24 வார்டுகளில் இஸ்லாமியர்களையும் 3 வார்டுகளில் இந்துக்களையும் நிறுத்தியது . இதில் பாஜக 27 வார்டுகளையும் கைப்பற்றி 100 சதவிகித வெற்றியை ருசித்துள்ளது.
இந்த நகராட்சியை இது வரைக்கும் வைத்திருந்து சீரழித்து வந்த காங்கிரஸ் கட்சியின் அனைத்து வேட்பாளர்கலுமே மண்ணை கவ்வியுள்ளனர். இதில் மூன்று வேட்பாளர்களால் டெபாசிட்டை கூட காப்பாற்ற முடியவில்லை.
"65 வருட காங்கிரஸ் அரசு எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை நாங்கள் அறிவோம் . நரேந்திர மோடி மக்கள் நல பணிகளை செய்து வருகிறார், அவருடன் இனைந்து பணியாற்றுவதன் மூலம் எங்கள் பகுதி வளமபெரும் என்று நம்புகிறோம்" சலீம் பாஜக வெற்றி வேட்பாளர்.
கடந்த பத்து வருடங்களாக மோடியை புறக்கணித்து வந்த இங்கிலாந்தும் , ஐரோப்பிய யூனியன்களும் இப்போது அவரை நாடி ஓடி வந்து கொண்டிருப்பது அவரை தவிர்க்க முடியாத உலக நாயகனாக பறை சாற்றுகிறது. குஜராத்தின் சிறு – குறு நிறுவனங்களின் 85% (ஒட்டு மொத்த இந்தியாவின் சராசரி வளர்ச்சியே 19 சதவிதம்தான்) அபார வளர்ச்சி அவரை ஒரு சிறந்த தேச வளர்ச்சி நாயகனாக காட்டுகிறது.
எட்டி இருந்த மும்பையை தாக்க முடிந்த அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகளால் அருகில் இருந்த குஜராத்தை நெருங்க கூட முடிய வில்லை இது அவரை ஒரு சிறந்த் தேச பாதுகாவலனாக காட்டுகிறது. மும்பை தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி சின்னா பின்னமானபோது அந்த மாநில முதல்வர் ஆடி அசைந்து வருவதற்குள் எங்கோ இருந்த மோடி தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ஒபேரா ஓட்டலுக்கு ஓடி வந்தது அவரை ஒரு சிறந்த தேசபக்தனாக காட்டுகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள சலாயா நகராட்சியோ மோடி நிறுத்துய அத்தனை வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து, அவரை அனைத்து மதத்தினருக்கும் பொதுவான வளர்ச்சி நாயகனாக பறைசாற்றி விட்டது.
எது எப்படியோ சலாயா வெற்றி வரவிருக்கும் 2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஒரு சிறந்த வாய்ப்பை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நரேந்திர மோடியின் மீது மத சாயத்தை பூசி அவரை ஒழித்து கட்ட முயல்பவர்களை ஒழித்துக்கட்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.