ஜோதிடம், வாஸ்து, ஆண்மைக்குறைவு மருந்துகள், இது போன்ற விஷயங்களில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நம்மில் பலருக்கும் அவ்வாறே என நம்புகிறேன், ஆனால் சிலர் இது போன்ற விஷயங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களை நினைத்தால் அவர்களை என்னவென்று சொல்வது,
இவர்கள் செய்கின்ற இழிவான வேலைகளை பாருங்கள்,
முதலில் அரசியல்வாதிகளின் தொடர்பினை நன்கு பலப்படுத்திக் கொள்வார்கள்,
பின்னர் ஊடகங்கள் , தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று தாங்களே சில ஆட்களை தயார்நிலைபடுத்தி அவர்களிடம் புதிதாய் பேசுவது போல் மக்களை வசியப்படுத்துவார்கள்,
அவர்களை சந்திக்க வருபவர்களிடம் எப்பொழுதும் பிசியாக இருப்பது போல பாவலா காட்டுவார்கள்,
அவர்கள் நம்மை சந்திக்க வந்தால் ஒரு வகை கட்டணம் , நாம் அவர்களை போய் சந்தித்தால் ஒரு கட்டணம் ( இந்த பிழைப்புக்கு ) இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்களின் அயோக்கியத்தனத்தினை ,
என் நண்பர்கள் பலர் இது போன்றவற்றினால் தங்களின் பணத்தினை இழந்திருக்கிறார்கள். சிலர் இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் கைகூலிகளாகவும் உள்ளனர்.
மக்களை விழுங்கும் இது போன்ற கயவர்கள் எப்பொழுதுதான் திருந்துவார்களோ?
நன்றி ; ராம்குமார்
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.