ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் தயான்சந்த்

 ஹாக்கி விளையாட்டின்  ஜாம்பவான்  தயான்சந்த்தயான்சந்த ஆனந்த. இந்த பெயரை கேள்விப்பட்டு இருக்குறீர்களா . பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று நினைக்கலாம் ஆனால் யார் என்று தெரியவில்லையா, சொல்கிறேன். உலக அளவில் பீல்ட் ஹாக்கி என்னும் விளையாட்டில் தனக்கென்று முத்திரை பதித்த ஜாம்பவான் தான் திரு. தயான்சந்த ஆனந்த.

உத்தர் பிரதேஷ் மாநிலத்தில், அலஹபாத் நகரில், சமேஷ்வர் தட் சிங் என்ற ராணுவ அதிகாரிக்கு மகனாக பிறந்த இவர் சிறு வயதில் மல்யுத்தத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். தனது பதினாறு வயதில் முதன் முதலாக ஹாக்கி மட்டையை கையில் எடுத்தார் , இந்திய ராணுவத்தில் சேர்ந்த பிறகு ஓய்வு நேரங்களில் ஹாக்கி விளையாட்டிற்கு அறிமுக படுத்தப்பட்ட பிறகு ஹாக்கி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக மாறினார் வேலை இல்லாத சமயங்களில் முழுவதும் ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டார், பல பயிற்சி ஆட்டங்களில் இவரின் வேகம் மற்றும் கடைதல் ஆட்டம் கவர்ந்தார்.

ஒலிம்பிக் போட்டிகளில் நீக்கப்பட்ட ஹாக்கி விளையாட்டை மீண்டும் இணைத்தார்கள். இந்த சமயத்தில் 1925 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி பெடரேசன் துவக்கப்பட்டது, 1928 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்பட்டது . பயிற்சிகளில் இவரின் வியக்க தக்க ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் பெற்றார் . நிதி பற்றாகுறையால் சிரமப்பட்டு, இறுதியாக ஒலிம்பிக்கில் பங்கேற்க பம்பாயில் இருந்து மூன்று பேர் வழியனுப்பி வைக்க இந்திய அணி ஐரோப்பா புறப்பட்டு சென்றது. முதலில் இங்கிலாந்தில் இறங்கிய இந்திய அணி அங்குள்ள உள்ளூர் அணிகளுடன் பயிற்சிக்காக மோதியது மொத்தம் 11 ஆட்டங்களில் அனைத்தையும் வென்று அசத்தியது இதை பார்த்த இங்கிலாந்து அணி, இந்தியர்களுடன் ஒலிம்பிக்கில் விளையாடினால் அடிமை தேசத்துடன் தோற்று போகும் நிலைமை ஏற்பட்டு விடும் என கருதி ஹாக்கி போட்டிகளில் இருந்து விலகினார்கள்.

பிறகு ஆம்ஸ்டர்டாமில் தொடங்கிய போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரியா, டென்மார்க் என வென்று இறுதி போட்டியில் நெதார்லாந்து அணியை சந்தித்தது முக்கியமான வீரர்கள் உடல் நிலை சரி இல்லாமல் ஓய்வு எடுத்தார்கள் தயான்சந்த உடல் நிலை சரி இல்லாத போதும் அணியில் பங்கேற்று தன்னுடைய சிறந்த ஆட்டத்தால் சக வீரர்களுடன் இந்திய அணியை வெற்றி பெற செய்தார். ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கபதக்கத்தை இந்தியா வென்றது, இந்தியாவிற்கு எதிராக எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை இன்று வரை இந்த சாதனை தொடர்கிறது, இந்த தொடரில் ஐந்து போட்டிகளில் தயான் 14 கோல்கள் அடித்தார் அது வரை இல்லாத அதிகபட்ச சாதனை.

வெற்றி வாகை சூடி நாடு திரும்பிய பொது ஆயிரகணக்கான மக்கள் வரவேற்க வந்திருந்தார்கள். பிறகு சில ஆண்டுகள் கழித்து சிலோன்( இலங்கை ) மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளை 10-0, 11-1 என்று வென்று ஒலிம்பிக் போட்டிகளுக்கு அமெரிக்கா கிளம்பி சென்றது. 1932 ஆம் ஆண்டு அமெரிக்கா லாஸ் ஆன்ஜெல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளிலும் இந்திய அணி வென்றது குறிப்பாக அமெரிக்காவை 24-1 என்று வீழ்த்தி ஹாக்கி போட்டி உலக சாதனை செய்தது இந்திய அணி, கோல் கீபர் ஆர்தர் சற்று கவனிக்காமல் ஓய்வு எடுத்திருந்த சமயம் அமெரிக்கர்கள் ஒரு கோல் அடித்து தங்கள் மன குறையை தீர்த்து கொண்டார்கள்,

இந்த தொடரில் தயான்சந்த தம்பி ரூப் சிங்கும் கலந்து கொண்டு கோல் மழை பொழிந்தார் இந்தியா இரண்டாவது ஒலிம்பிக் தங்கத்துடன் பயண செலவு கடனை அடைக்க ஐரோப்பா சுற்றுபயணம் மேற்கொண்டது மொத்தம் 37 ஆட்டங்களில் பங்கேற்று இரண்டில் சமநிலையுடன் 35 ஆட்டங்களில் வென்றது இதில் தயான்சந்த அடித்த கோல்கள் எண்ணிக்கை 133 இந்திய அணி அடித்த கோல்கள் 338. உள்ளூர் போட்டிகளில் பங்கேற்ற பிறகு நியூஜீலாந்து சென்ற இந்திய அணி 48 ஆட்டங்களில் அனைத்திலும் வெற்றி பெற்று 584 கோல்கள் அடித்தது இதில் தயான்சந்த தன் பங்கிற்கு 43 ஆட்டங்களில் 201 கோல்கள் அடித்தார் .

1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி தயான்சந்த தலைமையில் சென்றது. பிரான்ஸ் அணியை அரை இறுதியில் வீழ்த்தி ஜெர்மனியை இறுதி போட்டியில் சந்தித்தது, ஹிட்லர் அமர்ந்து பார்த்து கொண்டு இருக்க ஜெர்மனியும் இந்தியாவும் விருப்பாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். ஜெர்மனி அணியிடம் பந்தை விடாமல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது இதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி கோல் கீபர் தயான்சந்த பற்கள் உடையும் அளவிற்கு தாக்கினார், ஆட்டம் சற்று அமைதியானது, மருத்துவ உதவி பெற்ற பிறகு தயான் ஜெர்மனிக்கு பாடம் புகட்ட நினைத்தார், இந்தியர்கள் அதன் படி பந்தை ஜெர்மனியிடம் கொடுக்காமல் வேண்டும் என்றே ஜெர்மனி பக்கம் எடுத்து சென்று கோல் அடிக்காமல் நேரம் கடத்தினார்கள் ஜெர்மனி மேலும் ஆத்திரம் அடைந்தார்கள் ஆனால் ஒன்றும் செய்ய இயலவில்லை இறுதியாக 8-1 என்று வென்று மூன்றாவது முறையாக ஹாக்கி விளையாட்டின்  ஜாம்பவான்  தயான்சந்த் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்று சாதனை செய்தது .

இந்தியாவின் ஆட்டத்தில் ஆச்சரியப்பட்ட ஹிட்லர் இந்திய அணியை பாராட்டியதுடன் தயான்சந்த அவர்களை ஜெர்மனியின் ராணுவத்தில் சேர்ந்து கொள்ளும் படியும் மேஜர் பதவி தருவதாகவும் கூறினார் ஆனால் எனக்கு தாய் நாடு முக்கியம் என்று அதை அமைதியாக மறுத்துவிட்டார் தயான்சந்த. மொத்தம் மூன்று ஒலிம்பிக் தொடர்களில் 12 ஆட்டங்களில் 33 கோல்கள் அடித்து தனது அசாத்திய திறமையை நிருபித்தார். ஹாக்கி ஒரு மாய ஆட்டம் அதில் தயான் ஒரு மந்திரவாதி என்று பிரபல ஐரோப்பிய பத்திரிக்கையில் செய்தி வந்தது .. உலகின் அனைத்து அணிகளையும் விட இந்திய அணியின் தரம் மிக உயர்ந்ததாக கருதப்பட்டது நிரூபணம் ஆனது.

உலக போரால் இரண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவில்லை. பிறகு 1948 ஆம் ஆண்டு ஹாக்கி போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்தார், கிழக்கு ஆப்ரிக்க தொடரில் ஆசியா விளையாட்டு மையம் தயான் சந்த கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னதால் அதில் பங்கேற்று நாற்பது வயதிலும் 22 போட்டிகளில் 60 கோல்கள் மேல் அடித்தார். கடைசியாக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விட்டு விடை பெற்றார்.

1956 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து மேஜர் பதவி உடன் ஓய்வு பெற்றார். இவர் பெயரில் ஹாக்கி தொடரும் நடத்தப்பட்டது . அரசாங்கம் இவருக்கு "பத்ம பூசன்" விருது வழங்கியது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்று கொண்டு பல ஆண்டுகள் இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தார். இவர் காலத்தில் இந்திய அணி மேலும் ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்த அணியாக விளங்கியது.

தயான்சந்த ஆடும் காலத்தில் அவரை கண்டு வியக்காதவர்களே இல்லை, ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரின் விளையாட்டு மையத்தில் தயான்சந்த நான்கு கைகளுடன் நான்கு ஹாக்கி மட்டை வைத்திருப்பது போல சிலை வைத்துள்ளார்கள், ( இந்த காலத்தில் இந்தியருக்கு வெளிநாட்டவர்கள் சிலை வைப்பது அபூர்வம் அதுவும் விளையாட்டு வீரருக்கு என்றால் அது தயான்சந்தை தான் சேரும் புகழ் சிறப்பு எல்லாம் ) வீரருக்கு நெதர்லாந்தில் இவர் ஆட்டத்தை பார்த்து இவர் மட்டையை ஒடித்து உள்ளே காந்தம் எதாவது உள்ளதா என்று சோதனை செய்தார்கள். ஜப்பானில் இவர் மட்டையில் எதாவது பசை உள்ளதா என்றும் சோதனை செய்தார்கள், பலர் இவர் மட்டையை வாங்கி கொள்ள முன்வந்தார்கள் ஹிட்லரும் இவர் மட்டையை விலைக்கு வாங்க விருப்பபட்டார் .மொத்தம் இவர அடித்த கோல்கள் எண்ணிக்கை ஆயிரம் தாண்டும் .

தயான்சந்த மகன்களும் அவரை போலவே விளையாட்டில் சாதனை செய்தார்கள் முக்கியமாக அசோக் என்பவர் இந்தியா 1975 ஆம் ஆண்டு உலக ஹாக்கி கோப்பை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார் .

இவர் பிறந்த நாளை (ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய) விளையாட்டு தினமாக இந்திய அரசு அறிவித்துள்ளது. அந்த தினத்தில் தான் அர்ஜுனா விருது ,க்ஹேல் ரத்னா விருது, துரோனாச்சிரியார் விருது போன்றவை வழங்கபடுகிறது . தயான்சந்த் பெயரில் விருதும் கடந்த பத்து வருடங்களாக வழங்க படுகிறது.

ஆஸ்திரேலியாவில் 1935 ஆம் ஆண்டு இவர் ஆட்டத்தை பார்த்த உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் ஒருவராக கருத படுகிற டான் ப்ராட்மான் " கிரிக்கெட்டில் ரன்கள் எடுப்பதை போல ஹாக்கியில் இவர் கோல் அடிக்கிறார் " என்று கமெண்ட் செய்துள்ளார் .. கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான் பீலே என்று சொல்வதை போல ஹாக்கி விளையாட்டிற்கு தயான்சந்த் என்று சொன்னால் அது மிகை ஆகாது. ஹாக்கி விளையாட்டில் என்றும் இவர் பெயர் நிலைத்து இருக்கும்.
ஜெய் ஹிந்த் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...