கடவுள்களே ஜாதியை வலியுறுத்துகிறாரே ?

 கடவுள்களே ஜாதியை வலியுறுத்துகிறாரே ?உங்கள் மதத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. எங்கள் மார்கத்தில் எற்ற தாழ்வுகள் இல்லை, எல்லோரும் சமமாக கருதப்படுகிறார்கள். உங்களுக்குள்தான் எத்தனை ஜாதி வேறுபாடுகள் ? உங்கள் கடவுள்களே ஜாதியை வலியுறுத்துகிறாரே ?

ஹிந்துக்கள் ஜாதி என்னும் வட்டத்திற்குள் வந்ததற்கு பல சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் முக்கியமாக அந்நிய படையெடுப்புகள் காரணமாய் இருந்தன. இதற்கு முன் உள்ள பதிவுகளில் குறிப்பிட்டது போல், வர்ண ரீதியான குணங்களை குறித்த வேறுபாடுகள் வேறு, ஜாதிகள் வேறு. வர்ண ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட பிரிவுகள், காலப்போக்கில் தவறாக புரியப்பட்டு ஜாதி குழுக்களாய் மாறின. பண்டைய பாரதத்தில், மக்கள் சிறு சிறு குழுக்களாய் வாழ்ந்தனர். ஒவ்வொரு குழுக்களும் தங்களுக்குள்ளே சில கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் விதித்துக் கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்களில், ஆயிரக்கணக்கான ஜாதிகளாய் உருவெடுத்தனர். ஹிந்து மதம் என்று இன்று சொல்லப்படுவதே தர்மத்தால் ஒன்று சேர்ந்த இந்த ஆயிரக்கணக்கான குழுக்கள் தான்.

இன்று இந்த ஜாதிக் குழுக்களை நாம் வெறுத்தாலும், அவைதான் அந்நிய படையெடுப்புகளில் இருந்து நம்மை காப்பாற்றி உள்ளன. ஆங்கிலத்தில் "நெட்வர்க்" என்று சொல்வார்களே, அத்தகைய ஒரு வலைப் பின்னலாக தான் இந்த ஜாதிக் குழுக்கள் பங்காற்றின. ஒவ்வொரு குழுக்களும் தம் மக்களை தம் கூட்டத்திலிருந்து பிரியாத வண்ணம் காப்பாற்றிக் கொண்டன. சில ஜாதிக் குழுக்களோ மிக உயர்ந்த தண்மையை கொண்டவர்களாக இருந்தும் அந்நிய படையெடுப்பால் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டனர். பீகாரில் "பஷ்டூன்" எனப்படும் அரச பரம்பரையை சேர்ந்தவர்கள், முகலாயர்களோடு போராடி, தோல்வியுற்றதால் அடிமையாக்கப்பட்டு பின் கட்டாயப்படுத்தி மலம் அள்ள வைக்கப்பட்டனர். அவர்கள் பின்னர் மற்றவர்களால் அந்த தொழில் சார்ந்தே அடையாளப் படுத்தப்பட்டனர் என்பது ஒரு சிறந்த உதாரணம். அதை குறித்து தனி ஒரு பதிவில் விவரிக்கிறேன்.

மணிதன் இயல்பாகவே ஆளுமை செலுத்துவதில் விருப்பம் உள்ளவன். இயற்கையாகவே நான் பெரிது, நீ பெரிது என்று இருப்பவன். அதனால், மனிதர்களை விட்டு விடுங்கள்.

ஹிந்துமதத்தில் இறைவன் என்ன சொல்கிறான் ? பாரபட்சம் பார்க்கிறானா ?

இராமர், குகனோடு ஐவரானேன் என்று அவனை ஒரு சகோதரனாக ஏற்றுக் கொள்கிறார். காட்டில், சபரி என்னும் கிழவி எச்சில் படுத்தி கொடுத்த பழத்தை சக்ரவர்த்தி திருமகன் ருசித்து சாப்பிடுகிறார்.

கிருஷ்ணரோ, துரியோதனனின் அரச விருந்தை தவிர்த்துவிட்டு, விதுரன் எனும் சாதாரணவனின் குடிசைக்கு உணவருந்த போகிறார்.

சிவபெருமானோ, தன்னை திணமும் வழிபடும் அந்தணரை விட, தன்னை பெரிதும் வணங்கும் பக்தனாகிய கண்ணப்பன் எனும் வேடுவனின் கால் விரல்களை தன் கண்களில் பதியவிட்டு அவன் பக்தியை உலகுக்கு காட்டுகிறார்.

இப்படி இன்னும் ஆயிரமாயிராம் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு இடத்தில்லகூட‌ இறைவன் மணிதர்கள் மேல் பாரபட்சம் காட்டுகிறாரா என்றால் இல்லை. இல்லவே இல்லை.

அங்கே என்ன நடக்கிறது. இறைவனுக்கு இனை வைப்பவனுக்கு நரகத் தீயாம். நம்பிக்கை வைக்காதவர்களை அழிக்குமாறு இறைவனே ஆனையிடுகிறாராம். இப்படி அஸ்திவாரமே வண்முறையில் இருப்பதால், பல பிரிவுகளாய் பிரிந்து வன்முறை உலகெங்கும் தாண்டவமாடுகிறது. தினம் தினம் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை அழிக்கின்றனர். இனச் சண்டையில் பலர் உயிர் இழக்கின்றனர். இதில் எந்த முகத்தோடு, இவர்கள் நம் ஜாதிப் பிரிவுகளை பற்றி பேசுகிறார்கள் ? இவர்கள் நம் ஜாதிகளை பற்றி பேசுகிற நேரத்தில் குண்டு வெடிப்பில் உயிரிழக்கும் ஒரு பிரிவிணருக்கு முதல் உதவியாவது செய்யலாமல்லவா ?

Thanks; Enlightened Master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...