எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இதை நாம் அறிந்துகொள்ளத வரையில், எதுவுமே புரிந்து கொள்ள முடியாது.
ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுப்பட்ட இரண்டு இலட்சியங்கள் வாழ்க்கையில் உள்ளன. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும், எந்த மதத்தை பின்பற்றுவர்கள் ஆனாலும் எல்லோரும் அறிந்த ஓர் உண்மை, மனிதன் உடல் மட்டுமல்ல, ஆன்மாவும் கூட என்பதாகும். ஆனால் மானிட வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் உள்ளன.
மேலை நாட்டினர் பொதுவாக மனிதனின் உடல் விஷயங்களில் அதிக அக்கறை காட்டினர். இந்தியாவின் பக்தி ஆச்சாரியர்கள் அவனது ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள். இந்த வேறுபாடு கீழ்த்திசைக்கும் மேல்திசைக்கும் இயல்பாக அமைந்துள்ளது போல் தோன்றுகிறது.அன்றாட பேச்சு வார்த்தைகளிலும் இதையே நாம் காண்கிறோம். இங்கிலாந்தில் மரணத்தைக் குறிப்பிடும்போது, அவன் உயிரைத் துறக்கிறான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலோ, அவன் உடலைத் துறக்கிறான் என்று குறிப்பிடுகின்றனர். மனிதன் என்பவன் உடல், அதில் ஆன்மா உள்ளது என்பது முதல் கருத்து. மனிதன் ஆன்மா, அந்த ஆன்மாவிற்கு உடல் உண்டு என்பது இரண்டாவது கருத்து.
இதிலிருந்து சிக்கலான பிரச்சனைகள் பல எழுகின்றன. மனிதன் ஓர் உடல், அதில் உயிர் உள்ளது என்ற கொள்கையினர் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மனிதன் ஏன் வாழ்கிறான் என்று அவர்களை கேட்டால், உடைமைகள், சொத்து, உறவு முதலியவற்றால் இன்பம் பெறுவதற்கே என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.
இதைவிட மேலானது ஒன்று உள்ளது என்பதை சொன்னாலும் மனிதன் புரிந்து கொள்ள மாட்டான். அதனை அவனால் கனவுகூடக் காண முடியாது. இந்த இன்ப நுகர்ச்சியின் தொடர்ச்சியே எதிர்கால வாழ்க்கை என்பதுதான் அவனது கருத்து. அந்த இன்பங்களை அனுபவித்தவாறு எப்போதும் இங்கேயே தொடர்ந்து இருக்க முடியவில்லை, உலகை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்று அவன் மிகவும் வருந்துகிறான். எனவே எப்படியாவது இதே இன்பம் தொடர்ந்து கிடைக்கக் கூடிய ஓரிடத்திற்கு தான் போகக்கூடுமென்று கருதுகிறான். அங்கு அதே இன்பங்கள், இதே புலன் நுகர்ச்சிகள இன்னும் அதிகமாக உயர்ந்த அளவில் தனக்கு கிடைக்கும் என்று நம்புகிறான். இந்த இலக்கை அடையக் கடவுள்தான் வழி. எனவே அவரை வழிபட விரும்புகிறான். அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் புலனின்பம் தான். இந்த இன்பங்களை நீண்ட காலக் குத்தகைக்கு தருபவர் இறைவன் என்று நம்புவதால் அவரை வழிபடுகிறான்.
ஆனால் வாழ்க்கையின் லட்சியம் இறைவன். அவருக்கு அப்பாற்பட்டது வேறு ஒன்றுமில்லை. இப்பொழுது அனுபவிக்கும் புலனின்பங்கள், எதிர்காலத்தில் மேலான ஒன்றைப் பெறுவோம் என்ற நோக்குடன் தற்காலிகமாக அனுபவித்து கொண்டிருப்பவையே—இது இந்தியர்களின் கருத்து. அது மட்டுமல்ல; இந்த புலனின்பங்களே எல்லாம் என்று எண்ணினால் அது மிகவும் பயங்கரமானது, அழிவிற்கே வழிவகுப்பது ஆகும். புலனின்ப நாட்டம் குறையும் அளவிற்கு மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம்.
தொடரும்
—சுவாமி விவேகானந்தர் ……
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.