குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அமெரிக்க விசாவை எதிர் பார்த்து இல்லை . அமெரிக்காவுக்குச் அவர் செல்லமாட்டார் என பா.ஜ.க.,வின் செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது;
சமாஜ்வாதி கட்சியுடன் பா.ஜ.க., கூட்டணி வைத்து கொள்ளாது. உ.பி. அரசு வாயில்வைத்து சுவைத்துக் கொண்டிருக்க இன்று ஒரு லாலி பாப் மிட்டாயை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.
சமரசங்கள் செய்துகொண்டு மட்டுமே இந்த ஐ.மு., கூட்டணி அரசு தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவுசெய்யும்.
ஆளும் மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கி கொள்வோம் என முலாயம்சிங் மிரட்டல் விடுத்தால், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வருமா? இல்லை என்பதற்கு சிலகாரணங்கள் உள்ளன.
மூன்றாம் அணி என்பது ஒரு சரித்திரம் தான். அது ஒரு கடந்தகால நிகழ்வு.
மத்திய ஆளும் ஐ.மு., கூட்டணி அரசு, ஊன்று கோலுடன் தள்ளாடிய படி வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஐ.மு.கூட்டணி அரசைத் தலைமைதாங்கி நடத்தி வரும் மன்மோகன்சிங் போன்ற செயலற்ற நபர்களால் இந்தியா தகுதிவாய்ந்ததாக இல்லை.
மூன்றாவது முறையாக தான் பிரதமராக தேர்ந்தெடுக்க படும் வாய்ப்புகுறித்து மன்மோகன்சிங் மறுக்கவில்லை. ஆனால், மக்கள் அவரை பிரதமராக மீண்டும்பார்க்க விரும்பவில்லை என்றார் .
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.