ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை 'இழிந்தவர்கள்' 'வெறுக்கத்தக்கவர்கள்' என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?
கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை வெறுக்க வேண்டும், அதிலும் முக்கியமாக இந்துக்களை வெறுக்க வேண்டும் என்பதும் ஞாயிற்று கிழமைகளில் பள்ளிச் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படும் படங்களுள் ஒரு பகுதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் அந்தக் குழந்தைப் பருவம் முதல் அவர்கள் ஒவ்வொரு காசையும் கிறிஸ்துவ மதப் பிரச்சார அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமே!
உண்மைக்காக வேண்டாம், தங்கள் சொந்தக் குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்காகவாவது கிறிஸ்துவப் பாதிரிகள் இதைத் தடுக்கக் கூடாதா? இப்படிப்பட்ட குழந்தைகள் இரக்கமற்ற கொடியவர்களாக வளர்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
மீளா நரகத்தின் சித்திரவதைகளையும், அங்குக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும், கந்தகக் கற்களையும் பற்றி எவ்வளவு அதிகமாக ஒருவர் சித்தரிக்கிறரோ,அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவ பழமைவாதிகளிடையே உயர்ந்த இடம் பெறுகிறார். அவர்களின் மத மறுமலர்ச்சி பிரச்சாரத்தை கேட்டுவிட்டு எனது நண்பரின் பணிப்பெண் ஒருத்தியைப் பைத்திக்கரா விடுதிக்கு அனுப்ப நேரிட்டது. நரகத்தின் நெருப்பும் அங்குள்ள கந்தகத்தின் சூடும் அவளுக்கு பொறுக்க முடியாமால் போய்விட்டது.
இந்து மதத்திற்கு எதிராகச் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களைப் பாருங்கள். கிறிஸ்துவ மதத்தை எதிர்த்து ஓர் இந்து அதே போல் ஒரு வரி எழுதட்டும், பாதிரிகள் பழிக்குபழியாக நெருப்பைக் கக்கிவிடுவார்கள்.
எனது நாட்டின் அருமை மக்களே! நான் இங்கு ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். ஏறக்குறைய இங்குள்ள சமுகத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்: பாதிரிகள் கூறுவதுபோல் நாம் பேய்களும் அல்ல, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வது போல் அவர்கள் தேவர்களும் அல்ல.
–சுவாமி விவேகானந்தா
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.