பெங்களூர் பா.ஜ.க., அலுவலகம் அருகே மோட்டார்சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் 8 காவல்துறையினர் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடித்ததில் 3 கார்கள் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தன. கர்நாடகா மாநில சட்ட சபைக்கான தேர்தல் மே 5ம்தேதி நடைபெற இருக்கிறது . இன்று வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாளாகும்.
இதனால் பெங்களூர் மல்லேஸ் வரத்தில் அமைந்துள்ள பா.ஜ.க., அலுவலகத்தில் நூற்றுக் கணக்கான தொண்டர்களும் , முக்கிய தலைவர்களும் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் இன்றுகாலை 11 மணியளவில் திடீரென பா.ஜ.க., அலுவலகத்துக்கு வெளியே பெரும் வெடிச்சப்தம் கேட்டது. இதனால் அங்கிருந்தோர் சிதறியடித்து ஓடினர். முதலில் ஒருகாரில் கேஸ் சிலிண்டர் மாற்றும் போது அது வெடித்ததாக கருதப்பட்டது. ஆனால், பின்னர் வெடித்ததுவெடிகுண்டு என தெரியவந்தது. இந்தகுண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. குண்டுவெடித்தவுடன் அருகில் இருந்த மூன்று கார்களும் தீப் பிடித்து கொண்டன.
இதனிடையே முதல் வெடிகுண்டு வெடித்தபரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் பெங்களூரின் ஹெப்பால் எனும் இடத்தில் குண்டுவெடித்துள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
ஐஇடி ( IED) எனப்படும் சக்தி வாய்ந்த குண்டு இதில் பயன் படுத்தப்பட்டிருப்பதாகவும், பா.ஜ.க அலுவலகத்தை குறிவைத்தே இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.