கங்கை விஞ்ஞானம்

கங்கை விஞ்ஞானம்  இந்துக்களின் பெரும்பாலான கதைகளில் கங்காதேவி எனும் நதியின் கதைகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்…துக்கம் நீக்கும் கங்கை நீர்,புனிதம் மிகு கங்கை நீர் ,நோய் நிவாரணி கங்கை,போன்ற கதைகளைகளையும் வியாகியானங்களையும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்….

கங்கை புனிதமானது என்று சில ஆன்மிகவாதிகள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்…
கங்கா தீர்த்தம் எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டு போகாது என்று சில தூரபயனிகள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன்….

ஆனாலும் என்ன ஆச்சரியம் என்றால் விஞ்ஞானிகளும் இதே கருத்துகளையே வலியுறுத்தி உள்ளனர்….

கங்கை ஊர் சிறந்த கிருமிநாசினி எனும் கருத்து சிலரால் கூறப்பட்டது…..அது தொடர்பாக புது டெல்லியில் உள்ள மலேரியா ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட அறிக்கை மிகவும் வியப்புக்கு உள்ளாக்கியது….அவர்கள் மலேரியா காய்ச்சல் மற்றும் நுளம்புகள் தொடர்பான சில பரிசோதனைகளை செய்யும்போது இந்த தகவல்களை வெளியிட்டனர்..
யமுனை நதி மற்றும் கங்கை என்பவற்றுடன் சில நதிகளின் நீரை பரிசோதித்த போது கங்கை நதியின் நீரில் மட்டும் நுளம்புகள் பெருகவில்லை என அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டனர்….ஆரம்பத்தில் சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த முடிவை நகைத்தாலும் பின்பு அதற்குரிய விஞ்ஞான காரணம் வெளியிட்ட பின்பு ஏற்று கொண்டனர்…

பிரெஞ்சு நாட்டு மருத்துவ வல்லுநர் டாக்டர் டி ஹெரில்லி கங்கை நீர் பற்றி பின்வருமாறு கூறுகிறார்…"காலரா ,சீதபேதி இது மாதிரி நோயாள இறந்து போனவங்க பிணம்கள் கங்கையில் மிதந்து வருவதை பார்த்து இருக்கிறேன்.சாதாரண நீரில் அது மாதிரி பிணங்கள் வருகின்ற போது அதை சுற்றி உள்ள நீர்நிலைகள் யாவும் கிருமித்தொற்றுக்கு உள்ளாகும் ..ஆனால் கங்கையில் அதுமாதிரி எதுவித கிருமிகளை கூட பார்க்க முடியவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்தையும் தூண்டுதலையும் உண்டு பண்ணுகிறது" என்று கூறினார்

கனடா நாட்டின் "மெக்கில்" பல்கலை கழகத்தை சேர்ந்த டாக்டர் எ.சி.ஹாரிசன் என்பவர் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்…அவர் அது தொடர்பாக கருத்து வெளியிடுகையில் "கங்கை நீர் தொடர்பான ஆராய்சிகளை மேற்கொண்ட எனக்கு வியப்பு மட்டுமே மீதமாக இருந்தது….எந்த ஒரு கிருமியை நீரினில் போட்டாலும் 3.15 தொடக்கம் 4 மணித்தியாலங்களுக்குள் அவை யாவும் அழிந்து விடுகின்றன"என வியப்புடன் கூறினார்…

19 ம் நூற்றாண்டில் பிரிட்டிஸில் இருந்து வந்த கடல் ஆராய்வாளர் சி.இ.நெல்சன் இது பற்றி கூறும் போது "கல்கத்தாவில் இருந்து இங்கிலாந்து புறப்படும் போது நாங்க ஹிக்ளி (மேதகு வங்கத்தில் கங்கை இந்த பெயராலே அழைப்பர் ) எடுத்துகொண்டு போவோம்..இங்கிலாந்து செல்லும் வரைக்கும் அது கெட்டு போகாமல் இருக்கும்…ஆனால் திரும்பி வரும் பொது இங்கிலாந்தில் எடுக்கும் நீர் வரும் வழியிலே கெட்டு போய் விடுகிறது..நல்ல வேளை வரும் வழியில் எகிப்து துறைமுகத்தில் நீரை பெற்று கொள்ளலாம்."என்றார்…….இது கடவுளின் செயலா அல்லது எதேச்சையா என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளது"என்றார்….

அது எல்லாம் இருக்கட்டும்….இந்த அற்புத தன்மைக்கு என்ன காரணமாக இருக்கும் என சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து சில முடிவுகளை வெளிகொனர்ந்தனர்….

இந்திய மருத்துவர்களின் கருத்து படி இமய மலையில் உள்ள மூலிகைகள் இதுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர்….

ஆனால் கங்கை நீரிலே கதிரியக்க கனிமங்கள் (Radio -active minerals)உள்ளதாகவும் அதுதான் இந்த அசாதாரண சக்திக்கு காரணம் என்கின்றனர்….

வெள்ளி-நிக்கல் -இரும்பு-குரோமியம்–இது மாதிரி கனரக உலோக தாதுகள் கங்கை நீரிலே கரைந்து இருப்தால்தான் இந்த சக்தி என்றும் இந்த கனிமங்கள் கிருமிகளை அளிக்க கூடியது என்றும் சில விஞ்ஞான அமைப்புகள் கூறுகின்றன …

எது எவ்வாறு இருப்பினும் இந்த காரணங்களினால் தான் கங்கையில குளிச்சா எல்லாம்(நோய்கள் ) தொலையும் என்கிறது…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...