மம்தாவின் சிட்பண்டு ஊழல்…

 மம்தாவின் சிட்பண்டு ஊழல்... திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தாபானர்ஜிக்கு இது போதாத காலம்…தங்களது 35 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மந்தாவை தாக்குவதற்கு, கையில் கிடைத்த தூசி, துரும்பு, சிரட்டை , ஓடு எதையும் எடுத்து, மார்க்ஸிஸ்டுகள், தாக்கத் தயாராக இருந்த போது– மம்தாவே தானாகவே வலிய வந்து :சிட்பண்டு ஊழல்" வடிவில் மாட்டிக்கொண்டார்

மம்தாவுக்கு வாக்கு ஸ்தானத்தில் "சனி உச்சம்"–ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசி, கன்னத்தில் அறைய கையை ஓங்கி, காலில் உதைக்க காலை தூக்கி, தொடர்ந்து கெட்ட பெயர் வாங்கி வருகிறார்..ஆணாதிக்க இந்திய அரசியலும் , பெண்களை விடாமல்..துரத்துவதை நிறுத்தவில்லை..

பாராளுமன்ற சபாநாயகி, ஆளும் கூட்டணி தலைவி, எதிர்க்கட்சி தலைவி, உச்சநீதிமன்ற நீதிபதி, மாநில கவர்னர்கள், என்பனவெல்லாம், "ஸ்தானங்களை நிரப்பும் பெண்களே" என்றாகிவிட்டது…இவர்கள் சமஸ்தான அதிபதிகளுமல்ல..ஆஸ்தான தலைவிகளுமல்ல….ஆணாதிக்கத்தை மறக்க நடந்த பூசிமொழுகல்கள் "அப்பாயின்மெண்ட்கள் ".என்பதுதான் யதார்த்தம்

இது போகட்டும்..சப்ஜட்டுக்கு வருகிறேன்..மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் வீசிய "சாரதா சிட்பண்டு ஊழல்–புயற்காற்று"–அதன் முக்கிய குற்ற்வாளி சுதிப்தோ சென்…மம்தா பானர்ஜியின் கட்சியின் இரண்டு  எம்.பிக்களுக்கும்.. நெருக்கமானவராம்.. டி.எம்.சி.கட்சிக்கே ஊழலில் பங்கு உள்ளதாம்..என்ர குற்றசாட்டுக்கள்..இதை மம்தா மறுத்தது வேறு விஷயம்..

எப்போதும் போல்…எல்லா ஏமாற்று கம்பனிகள் செய்வது போல..ஏழை எளிய மக்களுக்கு அதிக வட்டிக்கு ஆசை காட்டியும், சிட்பண்டில் சேர்த்துவிடும் புரோக்கர்களுக்கு அதிக கமிஷன் ஆசை காட்டியும், 10,000/-கோடி ரூபாய்..வரை இந்த சாரதா சிபண்டு குரூப் சுருட்டியுள்ளது..

இதில் வேடிக்கை என்னவென்றால், "சாரதா குரூப் " என்கிற 160 கம்பெனிகளை உருவாக்கி…அதில் 11 கம்பெனிகள் மூலமாகவே சுமார் 20,000 கோடிகள் வரை கடந்த 10 ஆண்டுகளாக திரட்டியது,இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. சுருட்டிய பணத்தில் ஒரு டி.வி. சேனல் தவிர மற்ற எல்லாமே மீண்டும் மீண்டும் சுருட்ட ஏதுவாக தொடங்கிய கம்பெனிகளே..

இதில் சாரதா ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் –மாதாமாதம் சேமிக்கும் வகையில் ஏழை–நடுத்தட்டு மக்களீடம்..எந்த ஆதாரம், டாக்குமெண்களை காண்பிக்காமல், நிலம் –வீடு தருவதாக வசூல் செய்ததுதான் …ஆச்சரியம்–நம் மக்களின் "ஏமாளித்த்னத்துக்கு" உதாரணம்.., இதேமாதிரி நம்மூரிலும், இன்றும் நூற்றுக்கணக்கான ரியல் எஸ்டேட்ட்களும், தங்கநகை திட்டத்தில் கடைக்காரர்களும், வசூல் செய்து கொண்டிருப்பதும், அதில் சிலர் ஏமாற்றுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஊழல் வெளியே வந்தவுடன் மேற்கு வங்கம் முழுதும் ஒரே அதிர்ச்சி அலை..முதலில்உங்கள் பணம்.. "போனது போனதுதான் "–என்ற மம்தா..மக்களின் எதிர்ப்புக்கு பிறகு..எப்போதும் போல அந்தர் பல்டி அடித்து, அரசு பணத்தில் 500 கோடி தருவதாக ஒப்புக்கொண்டார்..எப்படி தருவார்?–எப்போது தருவார்?–யார் யாருக்கு தருவார் ?–எனபது எல்லாம் போகப்போகத்தான் தெரியும்..புகையிலை பொருட்களின் மீது வரிவிதித்து வரும் பணம் இதற்காகவேதானாம்..

இதற்கிடையே.."உன்னாலதான்.இந்த மோசடி…–இல்லை உன்னாலதான் இது.."..–"ஐ.ஆம்..ஓக்கே..யூ..ஆர் நாட் ஓக்கே"–என்ற லாவணி கச்சேரிகள் காங்கிரஸ்–காம்ரேடுகள் மற்றும் மம்தா கட்சியினர் இடையே வங்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது..

இவற்றை படிக்கிற போது தமிழர்களாகிய நமக்கு.. "பெங்காலியர்களை "பார்த்து சிரிப்புத்தான் வருகிறது.. எங்க ஊரில் (தமிழ்நாட்டில்..) இவையெல்லாம் சகஜம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான்…

திருப்பூர் "பாசி" நிறுவனம் முதல்..பெருந்துறை ஈமு கோழிப்பண்ணைகள் வரை—தீபாவளி பலகார சீட்டு முதல், பொள்ளாச்சி கொப்பறை தேங்காய்..நாட்டுக்கோழி வளர்ப்புவரை ..பல்வேறு வகை–புதுப்புது ஊழல்கள்..ஏமாற்றுதிட்டங்களில்எத்தனை லட்சம் குடும்பங்கள் இங்கு ஏமாந்திருக்கிற்து.இதற்காக அழுதோமா?—தொடர்ந்து ஏமாந்ததால்..அழுவதற்கு கண்ணீர் ஏது?..எல்லாம் வற்றிவிட்டது..

ஒரு சீட்டில் ஏமாந்து..ஒரு ஈமு கோழியில் பணத்தை பறிகொடுத்து..அதே மாதிரி வேறு ஒரு சீட்டுக்காரனும் கோழிக்கரானும் வந்தபோது தெரிந்தே மீண்டும் ஏமாந்தோமல்லவா?.இதெல்லாம் தமிழ்நாட்டில் சகஜம் என்ற நிலைக்கு வந்தபோது இப்போது மீண்டும் எப்படி உற்சாகமாக இருக்கிறோம் பாருங்கள்..

இப்படி ஏமாற்றும்.. சீட்டுக்கம்பெனிகளின் அங்க லட்சணங்கள் என்ன?

1..ஆடம்பரமான துவக்கம்..2..அதிக வட்டி—வருமானத்திற்கான ஆசை வார்த்தைகள்..3..அரசியல் வாதிகள்–அதிகாரிகளின் ஆசிகள் ஆதரவு..என பட்டியலிடலாம்..

மக்கள் ஏன் ஏமாந்தார்கள்?–1.குறைந்தகாலத்தில் அதிக வருவாய் வேண்டும் என்கிற ஆசை–எண்ணம்,,2..உடனடி பணம்–அதுவும் பெரும் பணம்..3..இது சாத்தியமா?–எப்படி இதை கம்பெனிகள் தருவார்கள்?–எத்தனை நாளைக்கு தருவார்கள்?–என்ற சிந்தனை இல்லாமை..

அடுத்த கேள்வி…இந்த ஏமாற்று கம்பெனிகளை –அரசு பார்த்துக்கொண்டு ஏன் சும்மா இருந்தது என்பதுதான்
..
இது சரியான கேள்வி அல்ல..பல்வேறு சட்டங்கள்–இம்முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கு இருந்தாலும் கூட..இதற்குள் ஒரு உள்கேள்வி எழுகிறது..

அரசு என்பது யார்?..அங்கு யார் இருக்கிறார்கள்?–நம்மில் ஒருவர்தான்.. அரசும் ..அதற்குள் இருப்பவரும் — நமக்கு—உடனடி பணம்–அதிகப்பணம் –ஆசை இருப்பது போல "அரசில் இருக்கும் " –அவருக்கும்– இருக்கத்தானே செய்யும்..அதனால் அவருக்கு பணம் கொடுத்து அவரை—அரசை–சரிக்கட்டி விடுகிறார்கள்.அப்படித்தானே "திருப்பூர் பாஸி நிற்வன ஊழல்" சுருட்டலில் ஒரு ஐ.பி.எஸ்.அதிகாரி மாட்டிக்கொண்டார்..

நாம் உழைத்து சம்பாதித்த பணம் ஒரே நாளில் அதிக குட்டி போடவேண்டும் என்று நினைத்தால்…பணம்..".சுருட்டி கொண்டு ஓடுபவர்கள் கைக்குத்தான் போகும்"..இதை சட்டம் போட்டு தடுக்க முடியாது..மாட்டிக்கொண்டால் சட்டப்படியான தண்டனை மட்டுமே கிடைக்கும் ..

நம்மிடம் குற்றங்களை தடுக்க ஏராளமான சட்டங்கள் உள்ளன..ஆனால் அவைகளை நிரைவேற்றத்தான் சரியான அதிகாரிகள் இல்லை.

போலீசுக்கு "அதிக பளு"–எனவே குற்றங்கள் நடந்து முடிந்த பின்னரே அவர்கள் சினிமாக்களில் வருவதுபோல வருகிறார்கள்.

நாம்தான் மக்களை இவர்களிடமிருந்து காக்க வேண்டும்..நம்மிலுள்ள "சமூக சிந்தனையாளர்கள்'–"சேவை அமைப்புக்கள்"–மக்களிடையே பாடம் நடத்தியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தியும் –"ஏமாற்று திட்டங்களையும், கம்பெனிகளையும்" மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவேண்டும்..

மக்களும்..அதிகவட்டி—உடனடி பணத்திற்கு ஆசைப்படாமல்..நம்பிக்கையான தேசிய வங்கிகளில் " முதலீடு செய்து பனத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...