ஹிந்து திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

ஹிந்து  திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? இந்திய தேசத்திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததிகாட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம்கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்புநெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

வஸ்து என்றால் பஞ்ச பூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள்உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப் பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக் கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனதுடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தபடுத்தி, தன்ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவமத்தியில் திலகமாக ஏற்றுக் கொள்கிறாள்;

கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடியகணவன் மணப் பெண்ணைப்பார்த்து, இனி நான் உனது உயிர் மூச்சாகவும் கல்லைப்போல மன உறுதியுட னும் இருந்து உன்வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன்காலை அம்மி மீதுவைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியை சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப் பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண்சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக்காட்டி அருந்ததியைப்போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்குமட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப் பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்தபெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்தி கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து அர்த்தநாரீஸ்வரியாக திகழ்கின்றாள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடிக்கு குவைத்தின் ஆர ...

பிரதமர் மோடிக்கு குவைத்தின் ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற உயரிய விருது இந்தியா - குவைத் இடையேயான உறவுகள், பல்துறைகளில் ஒத்துழைத்து, ...

உலக நன்மைகளை கவனித்தே எந்த ஒரு ...

உலக நன்மைகளை கவனித்தே எந்த ஒரு விஷயத்திலும் முடிவு: ஜெய் சங்கர் ''நாட்டின் நலன் மற்றும் உலக நன்மைகளை கவனித்தே, எந்த ...

பார்லிமென்டை முடக்கினால் வருத ...

பார்லிமென்டை முடக்கினால் வருத்தப்படுவீர்கள் – ஜக்தீப் தன்கர் “பார்லிமென்ட் நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கினால், உங்களை தேர்ந்தெடுத்து எதற்காக ...

மதத்தின் பெயரில் நடக்கும் அட்ட ...

மதத்தின் பெயரில் நடக்கும் அட்டூழியங்கள்: மோகன் பகவத் பேச்சு உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளும், அட்டூழியங்களும், ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...