ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தை தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புத தருணமே இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அதுமிகையாகாது. ஆயிரம் கதைகளை சொல்லும் பொம்மைகளை குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை விரும்பாதவர்களே கிடையாது. பெண் குழந்தைக்கு பர்பிகேள் என்றால், ஆண் குழந்தைக்கு கார்பொம்மை, கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு குழந்தைவடிவம் கொண்ட பொம்மை
அந்தளவுக்கு உணர்வுகளோடு கலந்திருக்கும் பொம்மைகளை வைத்து கொண்டாடும் விழா. நவராத்திரியின் இரண்டாம் நாள் அம்பிகையை மூன்று வயது பெண் குழந்தையாகப் பாவித்துப் பூஜிக்க வேண்டும். கொலுவில் வீற்றிருக்கும் அம்பிகையை திரிபுரா அல்லது வராஹி என்ற பெயருடன் இன்றுவழிபட வேண்டும். நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை பிரம்மசாரிணி தேவியாக வணங்கப்படுகிறது.
அம்பிகைக்கு கோதுமைமாவால் கட்டம் கோலம்போட்டு, ஜவ்வாதால் பொட்டு வைத்து, முல்லைப்பூ மாலை அணிவித்து, முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் படைத்து, நைவேத்தியமாக புளியோதரையை படைத்து, மகா விஷணுக்கு உகந்த துளசியைக் கொண்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்து குமாரிதிரிபுராவை வணங்க வேண்டும். ஏதாவது நவதானியத்தில் செய்தசுண்டலை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அதை வீட்டிற்குவரும் பெண்களுக்கு தாம்பூலத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
இவ்வாறாக இரண்டாம் நாளில், அம்பிகையை வழிபட்டால் தனம், தானியம் மட்டுமின்றி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியமும் கிட்டும். துர்க்கை பிரம்மசாரிணிக்கான அர்த்தம் ‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம்செய்தல் என்று பொருள். அம்பிகை மிக எளிமையாக காட்சிதரும் இந்த பிரம்மசாரிணியின் வலதுக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிபடுத்தப்படுகிறாள்.சிவபெருமானை திருமணம் செய்யும்பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும்தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவபெருமான் பிரம்மசாரிணியை திருமணம் புரிந்தார் என்று புராணங்கள் கூறுகிறது.
அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச் சாரிணியை வணங்குவதன் மூலம் பொறுமையைத்தர வல்லவள். அதோடு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவர். துன்பமான நேரத்திலும் மணம்தளராது இருக்க அருள்பவள். மனித உடலில் உள்ள முக்கியமான ஏழுசக்ரங்களில், உணர்வுகளோடு தொடர்புடைய ‘ஸ்வாதிஷ்தானம்’ சக்ரத்தில் இருப்பவள். இரண்டாம் நாள் யோகிகள் இவளின் அனுகிரகத்தால் இந்த சக்ரத்தை அடைவர். இவளுக்கான மந்திரம்!
ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்
தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன
கமண்டலமும், தண்டமும் தன் தாமரை கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருளவேண்டும் என்று அர்த்தமாகும். இவளுக்கான கோயில் பாரத தேசத்தின், தென்மாநிலத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் புரிகிறாள்.
மாணிக்கத்திற்கான பாடல்!
காணக் கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே பூணக்கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத்தவள் நாணித்திரு நாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே..
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |