மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு

இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன்மூலம் அவர் சரியான காரியத்தைச் செய்கிறார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.

கிழக்கத்திய பொருளியல் கருத்தரங்கம் (இஇஎஃப்) என்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் புட்டின் பேசியதாவது.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கார்கள்பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது புட்டின் இந்தியப் பிரதமரைப் பாராட்டினார்.

ஒரு நாட்டில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்கள் பயன் படுத்தப்பட வேண்டும்.பிரதமர் மோடி தலைமைத்துவத்தின் கீழ் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இந்தியா இதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் முன்பு உள்நாட்டில் கார்கள் தயாரிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தயாரிக்கப்படுகின்றன.மெர்சிடிஸ் அல்லது ஆடி போன்ற கார்களை 1990களில் அதிக விலை கொடுத்து நாம்வாங்கினோம். ஆனால், இப்போது ரஷ்யா தயாரிக்கும் கார்கள் அந்தக்கார்களைவிட நவீனமாகத் திகழ்கின்றன.

இதில் ஒன்றும் புதுமை இல்லை. இதில் இந்தியா எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்களை உள்நாட்டில் பயன்படுத்த இந்தியா இப்போது ஒரு மித்த கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன்மூலம் நரேந்திர மோடி சரியான செயலைச் செய்து வருகிறார் என்று புட்டின் பாராட்டினார்.

ரஷ்யா சொந்தமாக கார்களை தயாரிக்கிறது. அவற்றை ரஷ்யா பயன்படுத்தவேண்டும். இதன்மூலம் உலகவர்த்தக நிறுவனத்துக்கான நம்முடைய கடப்பாடுகளை நாம் மீறிவிட்டதாகப் பொருள்படாது என்று அதிபர் புட்டினை மேற்கோள்காட்டி ரஷ்ய இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த ஒருசெய்தி தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியம், சவூதி அரேபியா, இந்தியா ஆகியவற்றுடன் சேர்ந்து புதிய ஒருபொருளியல் வழித்தடத்தை ஏற்படுத்த அமெரிக்கா மும்முரமாகக் களத்தில் குதித்து இருக்கிறது.

அத்தகைய ஓர் ஏற்பாடு ரஷ்யாவுக்கும் பலன்அளிக்கும் என்றும் அதன்மூலம் தளவாடப் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என்றும் பல ஆண்டுகளாகவே இத்தகைய ஒருதிட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு வருவதாகவும் புட்டின் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்?

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்? நாடு முழுவதும் பலபகுதிகளில் இருக்கும் மோசமான சாலை மற்றும் ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது நியூஸ் 18 இன் 'சப்சே படா தங்கல்' (‘Sabse ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...