பா.ம.க., நிறுவனர் ராமதாசை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கவேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மரக்காணம், தருமபுரி சம்பவங்கள் நடை பெறுவதற்கு முன்பே அரசு தடுத்துதிருக்க வேண்டும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீது 2012-ல் பதிவுசெய்யப்பட்ட வழக்கிற்காக இப்போது அவர் கைதுசெய்த நடவடிக்கை சரியான வழிமுறையில்லை. அவரை மனிதாபிமான அடிப்படையில் அரசு விடுவிக்கவேண்டும்.கச்சத்தீவை திரும்பபெற வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை பா.ஜ.க., வரவேற்கிறது.
குஜராத் மாநிலம்போன்று தமிழகமும் பூரண மதுவிலக்குபெற்ற மாநிலமாக மாறவேண்டும்.சீனவின் அத்துமீறல், பூரணமதுவிலக்கு ஆகியவற்றை முன்வைத்து தமிழகம் முழுவதும் இரண்டு மாதம் மாவட்டம், ஒன்றிய, நகர, கிளைப்பகுதிகளில் பா.ஜ.க., சார்பில் போராட்டம் நடைபெறும்.கூட்டுறவு சங்கதேர்தலில் தமிழகம் முழுவதும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. குமரிமாவட்டத்தில் 200-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்டு பா.ஜ.க., வென்றுள்ளது. 18 சங்கங்களில் தலைவர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது என்றார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.