பலிகிடாக்கள் இருக்க படையல் காரனுக்கு என்ன பயம்

பலிகிடாக்கள்  இருக்க படையல் காரனுக்கு என்ன பயம் காங்கிரசின் ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் இடம் பெறுவதையே தற்ப்போதைய மத்திய அமைச்சர்கள் பெருமையாக கருதும் காலமாகவே தெரிகிறது. வர வர ஊழல் செய்யும் அமைச்சர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. தற்போதைய ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் புதிதாக பவன் குமார் பன்சால் சேர்ந்திருப்பது இதை நிருபிக்கும் விதமாகவே உள்ளது.

பவன்குமார் பன்சால், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் , இவரின் அக்காள் மகன்தான் விஜய் சிங்லா. கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, பன்சால் போட்டியிட்ட தொகுதியின் தேர்தல்பிரசார பணிகளை முழுமையாக கவனித்து கொண்டவர் . அமைச்சரின் தொகுதியில் அவருடைய மேலாளரை போன்றே செயல்பட்டு வருபவர் .

இந்நிலையில், ரயில்வே பொறியியல் சேவைபிரிவில், 1975ம் ஆண்டு பணியில்சேர்ந்த, சமீபத்தில், ஊழியர்கள் விவகாரங்களுக்கான ரயில்வே வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்ட, மகேஷ்குமார் , விஜய் சிங்லாவை அணுகி. ரயில்வே வாரியத்தில், தலைவர்பதவிக்கு அடுத்த பொறுப்பான, மின்துறை வரிய உறுப்பினராக தன்னை நியமிக்க, அமைச்சர் பன்சால் மூலம் உதவவேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு, 10 கோடி ரூபாய், லஞ்சமாக பேரம் பேசப்பட்டது இதில் 90 லட்சத்தை முன்பணமாக தருவது என்றும் பதவி கிடைத்தவுடன் மீதி தொகையை தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

விஜய் சிங்லா மற்றும் மகேஷ்குமார் இடையே நடந்த, லஞ்சபேரம் தொடர்பான தகவல்கள், சிபிஐ.,க்கு கிடைத்ததும், அவர்கள், சிங்லா மற்றும் மகேஷ்குமாரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதோடு, இருவரின் நடவடிக்கைகளையும் கண்காணித்தனர். இந்நிலையில் மகேஷ்குமார் தன் தூதர் மற்றும் இடைத் தரகராக செயல்பட்ட கோயல் மூலம், முன் பணமான 90 லட்சம் ரூபாயை, விஜய் சிங்லாவிடம், சண்டிகாரில் உள்ள அவர் வீட்டில் கொடுக்கும் போது . சி.பி.ஐ., அதிகாரிகள், சிங்லாவையும், கோயலையும் கைதுசெய்தனர். இந்த விவகாரத்தில், இடைத்தரகராக செயல்பட்ட மற்றொரு நபரான, மஞ்சுநாத்தை , பெங்களூரிலும் . முகேஷ் குமாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்திலும் கைது செய்துள்ளனர்.

பொதுவாக இந்திய இரயில்வே என்பது பணம் தந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு வேண்டுமானால் உயிரை பறிக்கும் எமனாக இருந்திருக்கலாம். இருக்கலாம். ஆனால் பல லட்சத்தை சம்பளமாக பெரும் உயர் அதிகாரிகளுக்கும் , அரசியல் வாதிகளுக்கும் இந்திய இரயில்வே என்பது பணம் காய்கும் மரமே!. வருடம் வருடம் திட்ட பணிகளுக்காக மட்டும் 50 ஆயிரம் கோடிக்கும் மேல் ஒதுக்க படுகிறது. இதில் கமிசன் மட்டுமே பலாயிரம் கோடிகளில் புரள்கிறது. இதில் இலஞ்சம் பத்து கோடி என்பதெல்லாம் பம்மாத்து வேலை! ஏமாற்று வேலை!. இலஞ்சமே சில நூறு கோடியகத்தான் இருக்க வேண்டும்.

ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சாலோ வழக்கமாக ஊழல் அமைச்சர்கள் பாடும் அதே  பாட்டை பாடியுள்ளார் . தான் மிகவும் நேர்மையானவர் என்றும் , தனது முடிவுகளில், யாரும் தலையிட முடியாது என்றும் . தனக்கும் தன அக்கா மகனுக்கும் எந்த வர்த்தக தொடர்பும் இல்லை என்றும் புராணம் பாடியுள்ளார். ஆனால் இலஞ்சம் கொடுத்ததோ இரயில்வே துறையில் பலம் தின்னு கொட்டை போட்ட ஓர் உயர் அதிகாரி, அவருக்கு தெரியாதா யார் காலை பிடித்தால் கை மேல் பலன் என்று. ஏற்க்கனவே பல பேரின் காலை பிடித்து காரியம் சாதித்ததன் பலனாக தானே பத்து கோடி இலஞ்சம் தரும் அளவுக்கு பலம் பொருந்தியவராக இருக்கிறார். . அவர் குப்பனுக்கோ சுப்பனுக்கோ இலஞ்சம் தர முன்வரவில்லையே.

 சி.பி.ஐ., விசாரணைக்கு தயார் என்றும் வீரம் பேசியுள்ளார் . எங்கே சுத்தியும் விசாரணை அறிக்கையின் இறுதி வடிவம் தங்கள்  கைக்குதனே வந்தாகவேண்டும் என்ற தைரியமாக இருக்கலாம் . இறுதியாக பல லட்சம் கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ள பிரதமரை சில கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் சந்தித்துள்ளார் . பிரதமர் என்ன கூறியிருப்பார் "பலலட்சம் கோடி ஊழல் புகாராலேயே என்னை அசைக்க முடியவில்லை , சில கோடி ஊழலுக்காக ஏன் அலட்டி கொள்கிறீர், பலிகிடாக்கள் விஜய் சிங்லா இருக்க பயமேன் என்று கூறி இருப்பார்.

ஆம் பல லட்சம் கோடி ஊழலில் புலங்கும் அமைச்சர்கள் அதில் சில கோடிகளை  அல்லி வீசி பலிகிடாக்களை கொழுக்க கொழுக்க வளர்க்கிறார்கள். வழக்கு வம்பு என்று வரும்போது படையல்காரணாக மாறி பலிகொடுத்து விடுகிறார்கள். 2ஜி ஊழலில் ராஜவாகட்டும் , காமன்வெல்த் ஊழலில் கல்மாடியாகட்டும், ஏன் தற்போது இரயில்வே ஊழலில் சிக்கியுள்ள விஜய் சிங்லாவாகட்டும் அனைவருமே பலிகிடாக்கள்தான் பவன் குமார் பன்சால் போன்றவர்கள்தான் படையல்காரர்கள். ஆனால் தேர்தல் திருவிழாவில் மக்கள்தான் படையல்காரர்கள் என்பதையும் அதில் காங்கிரஸ்தான் பலிகிடாவாக போகிறது என்பதயும் நினைவில் கொண்டால் நன்று.

தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.