கிரிக்கெட் சூதாட்டம் 3 வீரர்கள் கைது

 கிரிக்கெட் சூதாட்டம்  3 வீரர்கள் கைது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான நிறையவீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இந்த சூதாட்டத்தின் முக்கியபுள்ளி வெளிநாட்டில் இருந்துக்கொண்டு செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் டெல்லி போலீஸ்கமிஷனர்.இந்தமோசடி தொடர்பாக 3 வீரர்கள், 11 தரகர்கள் என

மொத்தம் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான்-புனே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின்போது அதிக ரன்கள் விட்டுகொடுக்க வீரர்கள் ஒப்புக்கொண்டதாகவும், இது தொடர்பாக தரகர்களிடம் பேசிய ஆதாரத்தையும் டெல்லிபோலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் நிருபர்களிடையே வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்ட முறைகேடு நடந்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இன்று தில்லி காவல் ஆணையர் நீரஜ்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்தார் .

முன்னதாக இந்த சூதாட்டபோட்டி நடந்தவிதம், சூதாட்டக்காரர்களுடன் வீரர்கள் மேற்கொண்ட சைககள் ஆகியவற்றையும் அவர் வீடியோக்கள்மூலம் திரையில் போட்டு காண்பித்தார்.

பின்னர் இதற்க்கு விளக்கமளித்த போலீஸ் கமிஷனர்,””வீரர்களுக்கும், சூதாட்ட தரகர்களுக்கும் இடையே ஓர்உடன்படிக்கை வைக்கப்படுகிறது. ஒருகுறிப்பிட்ட ஓவரில் இவ்வளவு ரன்கள் விட்டுக்கொடுப்பேன் என குறிப்பிட்ட வீரர் ஒருசெய்கை மூலம் தரகருக்கு உணர்த்தவேண்டும். அப்போது தரகர்கள் தங்கள் சூதாட்டத்தை தொடங்குவார்கள். இவ்வாறு, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சாண்டிலா தரகர்களின் பேரத்தின்படி, முன்கூட்டியே ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால், அவ்வாறு ரன்களை கொடுக்கும்முன்னதாக, அதற்குரிய சமிக்ஞைகளை அவர் தரகர்களுக்கு வெளிப்படுத்தவில்லை.

இதனால், அவருக்கு முன்னதாக தரப்பட்ட ரூ.20 லட்சம் பேரத்தொகையை தரகர்கள் திரும்பிக் கேட்டுள்ளனர். புனேவாரியர்ஸ் அணிக்கு எதிராக மே 5ம்தேதி நடந்தபோட்டியில் இது நடந்துள்ளது. சாண்டிலா வானத்தைப்பார்க்க வேண்டும். ஆனால், அவர் பார்க்கவில்லை அதேநேரம், சாண்டிலா அந்த ஓவரில்வீசிய 6 பந்தில் உத்தப்பாவும் பின்ச்சும் 14 ரன்களை எடுத்தனர். இதுவும் தீர்மானிக்கப்பட்டது தான்! ஆனால் தரர்கர்கள் சூதாட்டம் நடத்தவசதியாக இவர் அடையாளங்கள் எதையும் அவர்களுக்கு காட்டவில்லை. இதனால் அவருக்கு கொடுக்கப்பட்டபணம் திருப்பி கேட்கப்பட்டதாம்.
மே 9ஆம் தேதி மொகாலியில் நடைபெற்ற ராஜஸ்தான்ராயல்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் போட்டியில், ஸ்ரீசாந்த் தனது 2வது ஓவரை வீசுவதற்குமுன் தனது பேண்டில் வெள்ளைகைக்குட்டை ஒன்றை போட்டு கொள்ள வேண்டும், இதுதான் அடையாளம். அதாவது, அந்த ஓவர் சூதாட்டஓவர் என்பது பொருள். அதே போல் ஸ்ரீசாந்த் கைக்குட்டை பெற்றுக்கொள்கிறார். சிறிதுநேரம் பயிற்சிசெய்த பிறகு 13 ரன்களை வாரிக்கொடுத்தார். அந்த ஓவரை வீச துவங்குவதற்கு முன் பெட்டிங்செய்ய நேரம் வேண்டும்; எனவே ஏதாவதுசெய். ஆனால் என்ன செய்யப்போகிறாய் என்பதை தெரிவித்துவிடு என்று தரகர் மூலம் ஸ்ரீசாந்துக்கு தகவல்வருகிறது. அந்த ஓவரில் மார்ஷ் மற்றும் கில்கிறிஸ்ட் பந்துகளை விளாசித் தள்ளினர். அந்த ஓவருக்குப்பின்னர், ஸ்ரீசாந்த் பந்துவீச வரவில்லை.

கடைசிப்போட்டியாக, புதன்கிழமை இரவு நடந்த மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி. இதில், சண்டிலா, சவான் இருவரின் செயல்பாடும் சூதாட்டத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. இந்தப்போட்டியில் சாண்டிலா களத்டில் இறங்கி ஆடவில்லை என்றாலும், சாண்டிலா தான் சூதாட்ட தரகர்களுக்கும், சவானுக்குமிடையே இடைத்தரகு வேலைசெய்துள்ளார். இவரிடம் 60 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தஓவரில் சவான் 13 ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அவர் ஏற்கெனவே வீசிய முதல்ஓவரில் கட்டுக்கோப்பாக வீசி 2 ரன்களையே விட்டுக்கொடுத்த சவான், இரண்டாவது ஓவரில், முதல் மூன்றுபந்துகளிலேயே இரண்டு சிக்ஸர் இரண்டு ரன் என 14 ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டு, அடுத்த மூன்று பந்துகளை கட்டுக்கோப்பாக வீசிவிடுகிறார். இது சூதாட்டக்காரர்கள் சொன்ன ரன்னைவிட ஒருரன் கூடுதலாகும்.” என்றவர் முதலில் இந்தவிவகாரம் வெளிவந்ததே, ராஜஸ்தான் அணிவீரர் சண்டிலாவுக்கும் சூதாட்ட காரர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல், குறுஞ்செய்திகள் மூலமாகத்தான்!”என நீணட விளக்கம்கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...