கடலூரில் நாம்தமிழர் கட்சி சார்பில் நேற்றுமுன்தினம் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலைமுன்னணி தலைவர் யாசின்மாலிக் கலந்துகொண்டதற்க்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரச்சினையும் இலங்கை தமிழர்பிரச்சினையும் முற்றிலும் மாறுபட்டவை . காஷ்மீருக்கு மத்திய அரசு சிறப்புமாநில தகுதியை அளித்துள்ளது. ஆனால், இலங்கை தமிழர்களே இழந்துவிட்ட தங்களது உரிமைகளை மீட்டதற்காக போராடிவருகின்றனர். அதற்காக இந்தியஅரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மற்றும் மரக்காணத்திற்குள் அரசியல்கட்சி தலைவர்கள் நுழைவதற்குகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாசின் மாலிக்கை போன்ற பிரிவினைவாதியை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ளவேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.