சென்னையில் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ள பா.ஜனதாவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்கிறார். 2 ஜி ஸ்பெக்டரம் , நிலக்கரி சுரங்கங்க ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல்,
விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது.
இதைவலியுறுத்தி நாடுமுழுவதும் வரும் 27-ந்தேதி முதல் அடுத்தமாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை சிறைநிரப்பும் போராட்டம் நடைபெறும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.
அதன்படி தமிழக பா.ஜ,க சார்பில் சென்னை அண்ணாசாலையில் வருகிற 30-ந்தேதி மறியல்போராட்டம் நடைபெறுகிறது. பா.ஜ.க நடத்தும் மறியல்போராட்டத்தில் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் வருண் காந்தி, தேசிய செய்திதொடர்பாளர் மீனாட்சிலேகி, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த அறப்போராட்டத்தில் அரசியல்கட்சியினரும், பொதுமக்களும் திரளாக கலந்துகொள்ளும்படி அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.