காங்கிரஸ்கட்சி வம்சாவழி அரசியலை நடத்தி வருகிறது . இதன் மூலம் இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா? எனும் கேள்வி எழுகிறது பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான அருண்ஜேட்லி குற்றம் சுமத்தியுள்ளார்.
ம.பி.,யில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜேட்லி மேலும் பேசியதாவது:
ஆட்சிப்பொறுப்பை ராகுல் காந்தியிடம் ஒப்படைப்பதற்க்கான முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுவருகிறது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா? எனும் கேள்வி எழுகிறது. இந்த நேரத்தில், நாட்டை வழிநடத்தவேண்டியது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்த தலைவர்மட்டுமா, மாநிலங்களா அல்லது திறமையான ஒருவரா என்பதுகுறித்த விவாதத்தை தொடங்கி வைக்கவேண்டியது அவசியமாகிறது.
முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய், எல்கே. அத்வானி, நரேந்திரமோடி, சிவராஜ்சிங் சௌகான் மற்றும் ரமண்சிங் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் குடும்பப்பின்னணியின் அடிப்படையில் அல்லாமல் தங்களுடைய கடின உழைப்பின்மூலம் மட்டுமே உயர்ந்தார்கள். பிரதமர் மன்மோகன் சிறந்த நிர்வாகத்தை தரத்தவறி விட்டார். மாறாக, அவரது தலைமையிலான அரசு நமதுவரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் ஊழல் மலிந்த அரசாக மாறிவிட்டது.இதுவரை இல்லாத வகையில், முதன் முறையாக அரசின் செயல்பாடுகள் முடங்கிக்கிடக்கின்றன. இதனால் பொருளாதாரவளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது. இது மிகவும் கவலை தருவதாக உள்ளது.
நாடுமுழுவதும் நக்சல்களை ஒடுக்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரேநாளில் நிகழ்ந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது .ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நக்சல்களுக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இவரது இந்தக்கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் மற்றும் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் எதிர்ப்புதெரிவித்தனர். நாட்டிலேயே நக்சல்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கும் அரசுஎன்றால் அது ரமண்சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு மட்டுமே என்றார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.