பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மத சார்பின்மை போலியானது. பா.ஜ.க., தயவில் பதவிசுகத்தை அனுபவித்துவிட்டு. தற்போது திடீர் என்று மதச்சார்பின்மை பற்றி நிதிஷ் குமார் பேசுகிறார் என்று பிகார் மாநில பாஜக அமைச்சர் கிரிஜா சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பா.ஜ.க முன்னிறுத்துவது குறித்து நிதிஷ் குமார் பல கருத்துகளைக் கூறிவருகிறார். அவற்றுள் மோடி மதச் சார்புடையவர் என்பதும் ஒன்று.
இப்போது இந்தக்கருத்தை கூறும் நிதிஷ் குமார், 2002-ஆம் வருடம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய ரயில்வே அமைச்சராக பதவிவகித்தார். மத சார்பின்மை குறித்து பேசும் அவர், அப்போது பா.ஜ.க தயவில் கிடைத்த அமைச்சர்பதவியை ராஜிநாமா செய்யாதது ஏன்?
பிகார் சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல்அறிக்கையை மனதில் வைத்தே மக்கள் வாக்களித்து இந்தக்கூட்டணியை வெற்றி பெறச்செய்தனர். நிதிஷ் குமாருக்காக மட்டும் யாரும் வாக்களிக்கவில்லை. இத்தனை காலம் பா.ஜ.க., தயவில் பதவிசுகத்தை அனுபவித்துவிட்டு. தற்போது திடீர் என்று மதச்சார்பின்மை பற்றி நிதிஷ் குமார் பேசுகிறார்.
சந்தர்ப்பவாத அரசியல்நடத்தும் நிதிஷ் குமாரின் மதச்சார்பின்மை போலியானது. பிகாரில் ஐ.ஜ., தளத்துக்கு அளித்துவரும் ஆதரவு குறித்து பா.ஜ.க இதுவரை எந்தமுடிவும் எடுக்கவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முதல்வர் நிதிஷ் குமாரும் எடுக்கும் முடிவுகளை பொருத்து பா.ஜ.க தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றார் கிரிஜாசிங்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.