கூட்டணி ஒரு முறையல்ல பத்து முறை முறிந்தாலும் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் பின் வாங்குவது எனும் பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க., கருத்து தெரிவித்துள்ளது .
17 வருட காலமாக கூட்டணி உறவிலிருந்த ஐக்கிய ஜனதா தளம் இன்று கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. பா.ஜ,க.,வின் போக்கு பிடிக்கவில்லை என்றும், சமீபத்தியதேர்வு சரியில்லை என்றும் நிதீஷ் குமார் அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க., மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தர்அப்பாஸ் நக்வி;
மோடிக்கு வழங்கப்பட்டபொறுப்பில் இருந்து பா.ஜ.க, பின்வாங்காது . மோடிக்கா கூட்டணி பத்து முறை முறிந்தாலும் பரவாயில்லை . நரேந்திர மோடி விஷயத்தில் சமரசத்திற்க்கே இடமில்லை. என்றார்.
இது குறித்து பீகார் மாநில பா.ஜ.க., தலைவரும் துணை முதல்வருமான சுசீல் மோடி நிருபர்களிடம் தெரிவித்ததாவது ; இது பீகார் அரசியல்வரலாற்றின் கறுப்புநாள். இந்த பிளவுக்கு பா.ஜ.க, காரணமல்ல. நிதீஷ் குமார் எங்கள் கூட்டணி ஓட்டுக்களை பெற்றுத்தான் முதல்வரானார். எனவே தற்போது அவர் முதல்வர்பதவியில் இருந்து விலகவேண்டும் என்றார். மோடி பதவி வழங்கப்பட்டது உள்கட்சிவிவகாரம் இதில் நிதீஷ் தலையிடகூடாது. நிதீஷ் நடவடிக்கை கண்டித்து பா.ஜ.க, தரப்பில் வரும் 18 ம் தேதிக்கு பந்த் நடத்தப் படும். மோடி நாடுமுழுவதும் புகழ் பெற்ற ஒரு தலைவராக உருவாகியுள்ளார். நிதீஷ் குமார் ஓட்டுவங்கி அரசியல் நடத்துகிறார் என்றார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.