நமது சாஸ்திரங்களில் இல்லாத அறிவியல் எதுவுமே இல்லை

 நமது சாஸ்திரங்களில் இல்லாத அறிவியல் எதுவுமே இல்லை வேதாந்தம் உலகமேமாயை என்கிறது. அதனால் உலகவாழ்க்கைக்கு உதவுகிற விஷயங்களில் இந்தியர்களுக்கு அக்கறையேகிடையாது. சயன்ஸ், டெக்னாலஜி, மருத்துவம் , என்ஜினியரிங் எல்லாம் மேல் நாட்டிலிருந்து தான் இந்தியாவுக்கு வந்திருக்கிறது என்று சில வெள்ளைக்காரர்கள் மருத்துவம் சொல்வதுண்டு. இதுவே உண்மை என

நம்மவர்களும் நம்பி, ஏதோ கண்ணுக்குத்தெரியாத கடவுள்களையும் , ஆத்மாவையும் பற்றித்தான் ஹிந்து சாஸ்திரங்கள் இருக்கின்றன. லோகவாழ்க்கைக்கு உபயோகமாக அவற்றில் ஒன்றும்இல்லை என்று கண்டனம்செய்வதுண்டு.

உண்மையில் நமது சாஸ்திரங்களில் இல்லாத அறிவியல் எதுவுமே இல்லை. நமது புராதன சாஸ்திரங்களை எல்லாம் ஆராய்ந்துபார்த்தால், இந்த உண்மை தெரிய வரும் . ஆயுர் வேதத்தை – சரகர். சுச்ருதர் முதலானவர்களின் கிரந்தங்களைப்பார்த்தால், இப்போதைய பெரிய மருத்துவர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவமுறைகளும், ஸர்ஜர் விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம்.

மிகவும் புராதனமான அதர்வணவேதத்திலேயே யுத்தத்தில் உண்டாகும் பலவிதமான காயங்களை குணமாக்கும் மூலிகைகள், சிகிச்சை முறைகள் முதலியவற்றை பற்றி சொல்லியிருப்பது இப்போது மிகவும் உபயோகமாக இருப்பதாக சமீபத்தில் காசி சர்வ கலாசாலையில் ஒருத்தர் ஆராய்ச்சிசெய்து கண்டுபிடித்திருக்கிறார்.

பொறியியல் தொழிழ்நுட்பத்திலும் ஆதியிலேயே அபாரமானதிறமையை நம்மவர்கள் காட்டியிருக்கிறார்கள். போஜராஜனின் ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாயவிமானம் உள்படப் பலவிதமான இயந்திரங்களை செய்வதற்கான அடிப்படை தத்வங்கள் விவரிக்கபட்டிருக்கிறது. சுமார் இரண்டாயிரம் வருடங்களாக ஒரு இரும்புஸ்தம்பம் இன்றைக்கும் தில்லி குதுப்மினாருக்கு பக்கத்தில் துருப் பிடிக்காமல் இருக்கிறது. டாடா தொழிற்சாலை இல்லாமலே இப்பட்டிப்பட்ட பெரியதூணை எந்த உலையில் (FURNACE) அடித்து உருவாக்கினார் கள் என ஆச்சரியப்படும்படி இருக்கிறது.

தமிழ் நாட்டிலேயே இப்படிப் பல பொறியியல் அற்புதங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளான கல்லணை எந்த விதமான கலவையால் கட்டப்பட்டது என்று இன்றும் புரியவில்லை. ஆவுடையார்கோவில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒருகாகிதத்தின் அளவுக்கு மெல்லியதாக இழைத்திருக் கிறார்கள். திருவீழிமிழலை வெளவால்ஒட்டி
மண்டபத்தின் பிரம்மாண்ட வளைவை (ARCH) எந்த ஆதாரத்தில் கட்டி இருக்கிறார்கள் என்று பொறியியல் நிபுணர்களும் வியக்கிறார்கள்.

தமிழில் பதினெண் சித்தர்கள்பாடலில் இருக்கிற வைத்திய நுணுக்கங்கள் சரகர். சுச்ருதர் கொஞ்சநஞ்சமல்ல. வானநூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்தியத்தால் தான் எத்தனையோ ஆயிரம் வருடங்களாக , இன்று அம்மாவாஸை, இன்று கிரகணம் என்று மிக துல்லியமாக பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது.

எல்லாகலைகளும் சாஸ்திரங்களும், அறிவியல்களும் , பாரததேசத்தில் நன்றாக வளர்ந்தே வந்திருக்கின்றன. ஆனாலும், இப்போது, விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் அணு குண்டு உள்ளிட்ட எத்தனையோ அனர்த்தங்கள் உண்டாகியிருப்பதை பார்க்கிறோம் அல்லவா?

இப்படி நேரக்கூடாது என்பதாலேயே, பக்குவ மானவர்களுக்கு மட்டும் நம்தேசத்தில் விஞ்ஞான நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தார்கள். சாதாரண மக்களுக்கு புரியாத பாஷையில் இந்த சாஸ்திரங்கள் அமைந்ததற்க்கு இதுவேகாரணம். சித்தர்களின் தமிழ் பாடல்களும் கூட இப்படித்தான் நமக்குப்புரியாத பரிபாஷையில் இருக்கும்.

இப்போது நிபுணர்கள் ஆராய்ச்சிசெய்தால், நம் சாஸ்திரங்களிலிருந்து பலவிஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். சில சமாச்சாரங்கள் நமக்குப்புரியாமல் இருக்கும். அதற்காக அவற்றை நாம் ஒதுக்கிவிடக் கூடாது. நமக்குப்பின்னால் வருபவர்களுக்காவது அது புரியக்கூடும் என்பதால், நமக்குப்புரிகிற சாஸ்திரங்கள், புரியாதசாஸ்திரங்கள் எல்லாவற்றையும் நாம் ரக்ஷித்துக் கொடுக்கவேண்டும்.

மற்ற தேசங்களில் சமீபகாலமாகவே இந்த விஞ்ஞான வித்தைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. நாம் ஆதியில் நமக்கென்றே இருந்த இந்த வித்யாசம்பவத்தை மறந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து இப்போது கற்றுக்கொள்கிறோம். இதில் ஒருமுக்கியமான வித்தியாசம், இந்த வித்தைகள்யாவும் பிரம்மவித்தை என்கிற ஆத்ம சிரேயஸுக்கு அநுச்சரணையாகவே நம்தேசத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வெறும் லௌகிக சௌகரியத்துக்காகவே அவற்றை உபயோகப் படுத்தி மேல் நாடுகள்  உண்டாகியிருக்கிற 'நாகரிக'த்தில் ஆத்ம சாந்தி அடியோடு போய்விட்டது. இதை மேல்நாட்டுக்காரர்கள் நான்றாக உணர்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் மூலம் படிப்படியாக நாகரீகத்தில் ஏறி, இப்போது அதில் அவர்கள் உச்சநிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் இதில் ஆத்மதிருப்தி இல்லை என்று கண்டுகொண்டு நம்முடைய பக்திமார்க்கத்தின் பக்கமும் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாமோ நம்முடைய லௌகிகவித்தை, ஆத்மவித்தை இரண்டையும் அலட்சியம்செய்து விட்டு, மற்ற நாட்டவர்கள் அடைந்திருக்கிற இரண்டுங்கெட்டான் நாகரீகத்தைத்தேடி ஒடுகிறோம். அவர்கள் இரும்பு உலகத்தில் இருந்து (iron Age) தங்கயுகத்துக்கு (Golden Age) அதாவது, இருட்டு யுகத்திலிருந்து பிரகாசயுகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நாமோ பிரகாச யுகத்தில் இருந்து இருட்டு யுகத்திற்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்றால், நாமோ நிறைவிலிருந்து குறைவுக்கு போய்க்கொண்டிருக்கிறோம்

Tags; வேதாந்தம், ஹிந்து சாஸ்திரங்கள் , லோக வாழ்க்கை, புராதன சாஸ்திரங்கள், ஆயுர் வேதம், சரகர், சுச்ருதர்,   அதர்வண வேதம் , போஜராஜன், ஸமராங்கண சூத்திரம், கல்லணை, பிரம்ம வித்தை, ஆத்ம சாந்தி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...