உ.பி.,யில் மாநிலத்தில் சாதி ஊர்வலங்களுக்கு உடனடி தடைவிதித்து அதிரடி தீர்ப்பை தந்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
உத்தரபிரதேசத்தில் லோக்சபா தேர்தலைமுன்னிட்டு 38 தொகுதிகளில் இருக்கும் பிராமணர்களின் வாக்குகளைக் கவரும்வகையில் பிராமணர் மாநாடுகளை பகுஜன்சமாஜ் கட்சி நடத்தியது . லக்னோவில் நடந்த மாநாடு மற்றும் பேரணியில் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி கலந்துகொண்டார்.
இதேபோன்று சமாஜ்வாடி கட்சியும் பிராமணர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளின் மாநாட்டை நடத்தியது. இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் மோதிலால்யாதவ் என்பவர் சாதிமாநாடு, ஊர்வலங்களை தடைசெய்யக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
இம்மனு விசாரித்த நீதிபதிகள் உமாநாத்சிங், மகேந்திர தயாள் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சாதிமாநாடுகள், ஊர்வலங்களுக்கு அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர். இந்தவழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 25ந் தேதி நடைபெறுகிறது.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.