ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது சாதாரணமானதாக தோன்ற வில்லை

 ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது சாதாரணமானதாக தோன்ற வில்லை தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டகொலைகள் நிகழ்ந்துள்ளன என பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.

பாஜக.,வின் மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு கண்டனம்தெரிவித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ரமேஷ் சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு கொடூரமானமுறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தணிக்கையாளர் ரமேஷின் வீட்டு வளாகத்தில் பதுங்கியிருந்த கொலைகாரர்கள்தான் அவரை கொலைசெய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. ரமேஷின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே முறையீடு அளித்திருந்தபோதும், அவருக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறை தவறிவிட்டது. ஒரு தேசியகட்சியின் மாநில பொதுச் செயலாளர் படுகொலையை காவல்துறை தடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

கடந்த 9 மாதங்களில்மட்டும் இவர் சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்தகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்ய படவில்லை என்பது தமிழக காவல் துறையின் திறமையின்மையை காட்டுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக. அரசு பதவி ஏற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம்முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டகொலைகள் நடந்திருக்கின்றன; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டுவழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

இவற்றையெல்லாம் தடுக்கவேண்டிய காவல் துறைக்கு பொறுப்புவகிக்கும் முதலமைச்சரோ, பாட்டாளி மக்கள்கட்சியினர் மீது பொய்வழக்குகளை பதிவுசெய்வது, அப்பாவித் தொண்டர்களை குண்டர்சட்டம் மற்றும் தேசியப்பாதுகாப்பு சட்டங்களில் கைதுசெய்து சிறையில் அடைப்பது, பாமக. மீது அவதூறுபரப்புவது ஆகியவற்றில் மட்டுமே அக்கறைகாட்டி வருகிறார்.

பாமக.வினரை பழிவாங்குவதில் காட்டும் தீவிரத்தில் பத்தில் ஒருபங்கை சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காட்டியிருந்தால் இதுபோன்ற படுகொலைகளை தடுத்து, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக பராமரித்திருக்க முடியும். ஒரே அமைப்பைச்சேர்ந்தவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது சாதாரணமானதாக தோன்ற வில்லை. இதன்பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிடவேண்டும். இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...