ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்

ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் 11 பேர் மீது குறி வைத்து இதில் 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.என்று சென்னை சைதாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டு கைதான பா.ஜ,க மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங் களின் தூண்டுதலினால் தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவருகின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் டிசம்பர் 6–ந் தேதி தமிழகத்தில்மட்டும் பதட்டத்தை உருவாக்குகிறார்கள்.

பா.ஜ.க மற்றும் இந்து இயக்க தலைவர்கள் 11பேர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது. இதில் 5பேர் பலியாகி உள்ளனர் . ஆடிட்டர் ரமேஷ் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.

மக்களின் உணர்வுகளை இன்று வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தபோராட்டம் அரசுக்கு எதிரானதல்ல. கொந்தளிக்கும் உணர்வுகள் வேறுபாதையில் திரும்பிவிட கூடாது. எங்கள் கோரிக்கையை ஏற்று சிறப்பு விசாரணைகுழு அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதும் 24 மணிநேரத்தில் கொலையாளியின் உருவப்படத்தின் மாதிரியை வெளியிட்டு இருப்பதும் ஆறுதல் தருகிறது . இதேவேகத்துடன் கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.