வானிலையை மிகதுல்லியமாக கணிக்கும் இந்தியாவின் இன்சாட்3டி செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாகசெலுத்தப்பட்டது. பிரெஞ்ச்கயானாவின் கோக்ரு ஏவு தளத்திலிருந்து இன்று அதிகாலை 1,24க்கு செயற்கைக் கோளை தாங்கிச்சென்ற ஏரியன் 5 ராக்கெட் விண்ணில்ஏவப்பட்டது.
ராக்கெட் புறப்பட்ட 32நிமிடம் 42 வினாடிகளில் இன்சாட்3டி செயற்கைக்கோள் அதன் நீள்வட்ட சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. செயற்கைக் கோளின் சூரியமின்சக்தி உடனடியாக செயல்பாட்டிற்கு வந்ததாகவும் கர்நாடகமாநிலம் ஹாசனிலுள்ள இஸ்ரோ பிரிவின் கட்டுபாட்டிற்குள் தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள செயற்கைக் கோள் வந்துள்ளதாகவும் இஸ்ரோவின் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.
இன்சாட்3டி செயற்கைக் கோளின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது. செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ள 19 சானல்களைகொண்ட வளிமண்டல ஒளி சாதனத்தின் மூலம் வானிலையை துல்லியமாக கண்காணிக்கமுடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. வெப்பநிலை, ஈரப்பதம், ஓசோன்மண்டலம் ஆகியவற்றின் அவப்போதைய நிலை பற்றிய விவரங்களை இன்சாட் 3டி செயற்கைக்கோள் அனுப்பும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.