மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தன்னை மதச் சார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு மதவாத அரசியலை நடத்திவருகிறது.என்று பா.ஜ.க , இளைஞரணி சார்பில் ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக்கோரி தேனியில் நடந்த ஜூலை போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்;
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:– 1975–ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடிநிலை அறிவிப்புக்குபின் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்களின் ஆதரவு குறைந்தது. இதனால் முஸ்லிம்கள்மத்தியில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ள சச்சார் கமிட்டியை அமைத்தது. அந்தகமிட்டி அளித்த அறிக்கையின்படி முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி இருப்பதாக கூறி அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்து வழங்கிவருகிறது.
அரசியல் அமைப்புசட்டத்தில் பொருளாதார, சமூகநிலையில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் சலுகைகளை வரையறுத்த டாக்டர் அம்பேத்கார் முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மத ரீதியில் சலுகைகளை வகுக்கவில்லை.
இலவச கல்விதிட்டத்தை கொண்டுவந்த காமராஜர்கூட ஜாதி, மத அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தவில்லை. ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தன்னை மதச்சார்பற்றகட்சி என கூறிக்கொண்டு மதவாத அரசியலை நடத்திவருகிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதி. தமிழகத்தில் மத தலைவர்கள் தாக்கப்படுவதை தடுக்க போலீசார் தீவிரநடவடிக்கை எடுக்கவேண்டும்.
மதத்தின் அடிப்படையில் சலுகைகள் வழங்குவதுகூடாது. இந்துமாணவர்கள் கல்வி உதவித்தொகைபெற வட்டாட்சியரிடம் சான்றுபெற வேண்டும், 50 சதவீத மதிப்பெண் பெறவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து குறைந்ததொகையை வழங்கும் அரசு சிறுபான்மையினருக்கு சுய உறுதிமொழியின் அடிப்படையில் அதிகதொகை வழங்குகிறது.
சிறுபான்மை யினருக்கு சலுகைகள் வழங்குவதை நாங்கள் எதிர்க்க வில்லை. அவர்களுக்கு நிகராக இந்துமாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கவேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக. அதிக இடங்களை பிடித்து மத்தியில் ஆட்சியமைப்பது உறுதி என்றார்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.