பா.ஜ., இந்துமுன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ்., இயக்க தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்ய படுவதைத் தடுக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க , மூத்த தலைவர் அத்வானி கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க, மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து ஜவஹர்மில் திடலில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசினார். அவர் பேசுகையில், கடந்த 1997ம் ஆண்டு கடைசியாக சேலம்வந்ததாக ஞாபகம். இன்றைய தினம் ஒருமோசமான சம்பவத்திற்காக சேலம் வந்துள்ளேன். சிறந்த ஆடிட்டரான ரமேஷ் ஏன் கொலைசெய்யப்பட்டார் என்றே தெரியவில்லை. இங்கு வருவதற்கு முன் அவரது வீட்டிற்குச்சென்று ஆறுதல் கூறினேன். ஆடிட்டர் ரமேஷ்கொலை தொடர்பாக, சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் தான், விசாரணைக் குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கம் முழுமை அடையும் . ஆடிட்டர் ரமேஷூக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக பொதுமக்கள் திரளாகநிற்பது மனதை நெகிழச்செய்கிறது.
கடந்த 1951 ம் ஆண்டு முதல் சிலநாட்களை மறக்க முடியாது. ஜூலை 19ம் தேதி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டார். 1998ம் ஆண்டு தேசியஜனநாயக கூட்டணி, நிலையான ஒரு ஆட்சி வாஜ்பாய் தலைமையில் அமைந்தது. அதற்கு சிலநாட்களுக்கு முன்பாக கோவையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தேன்.
அப்போது குண்டுவெடிப்பால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காயப்பட்டுள்ளனர். அதுபோன்ற ஒரு மோசமான சம்பவத்தை மறக்கமுடியாது. சாம்பிரகாஷ் முகர்ஜி காஷ்மீரில் கொல்லப்பட்டார். தீனதயாள் உபாத்யா ஓடும்ரயிலில் கொல்லப்பட்டார். இதுபோல் நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொல்லப்பட்டுள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜ., மகளிரணியைச்சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி தீக்குளித்து இறந்துள்ளார். இதேபோல், முருகமணி என்பவர் மாரடைப்பால் பலியாகி யுள்ளார். இதற்கெல்லாம் காரணமாக பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். விரைவிலேயே தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்குமுன் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இருந்தே மக்கள் ஆட்சிமாற்றத்தை எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர். அவர்கள் நரேந்திரமோடி, ராமன் சிங், சிவராஜ்சிங் சவுகான் போன்ற ஆட்சிகளையும் பார்க்கின்றனர். மத்திய ஆட்சியையும் பார்க்கின்றனர். பா.ஜ.க., இரண்டு விஷயங்களை எப்போதுமே பொறுத்துக் கொள்ளாது. ஒன்று பயங்கரவாதம் மற்றொன்று ஊழல். இதை இரண்டையும் தவிர்த்த ஆட்சியை பா.ஜ.கே., வழங்கும். இவ்வாறு அத்வானி பேசினார்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.