பாகிஸ்தானின் தீர்மானம் இந்தியாவுக்கு எதிரானது

 இந்தியாவின் மீது குற்றம்சாட்டி பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ள தீர்மானம் இந்தியாவுக்கு எதிரானது என்று பாஜக. கருத்துதெரிவித்துள்ளது.

‌ஒப்பந்தமீறல்:போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. சிலமாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து இரண்டு ராணுவ வீரர்களின் தலையை வெட்டிதுண்டித்து படுகொலைசெய்த பாகிஸ்தான் ராணுவம், தற்போது 5 இந்திய வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளது.

இதுதொடர்பாக இந்தியாமுழுவதும் கண்டனக் குரல் எழும்பிவரும் வேளையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியவீரர்கள் அத்துமீறி நுழைவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பொய்பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அந்நாட்டின் பொது மக்களையும், ராணுவ வீரர்களையும் கொல்வதாக குற்றம்சாட்டி, இதனை கண்டிக்கும்தீர்மானம் ஒன்றையும் பாகிஸ்தானின் பஞ்சாப்மாகாண சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷரீப் பஞ்சாப்மாகாண முதல்வராக உள்ளார் .

இதற்கிடையில், இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றத்துக்கு இந்திய ராணுவவீரர்களின் அத்துமீறல் தான் காரணம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பமந்திரி ஹமித் பார்லிமென்டில் ஒரு தீர்மானத்தை தாக்கல்செய்தார்.
இது தொடர்பாக பாஜக. செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜவாடேகர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றியது கண்டிக்கதக்கது என்றார்.

எல்லைப்பகுதியில் நடந்துவரும் அத்து மீறல்களுக்கும், படுகொலைகளுக்கும் காரணமான பாகிஸ்தான், இந்தியாமீது பழிசுமத்தி கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் இந்தியாவுக்கு எதிரானது ஆகும். இதனை இந்தியா உடனடியாக கண்டிக்கவேண்டும். இந்த தீர்மானத்தின் மூலம் பாகிஸ்தானின்நோக்கம் இந்தியாவை எதிர்ப்பதுதான் என்பது தெளிவாகியுள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...