இளம் தாமரை மாநாட்டில் ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி பங்கேற்ப்பு

 திருச்சியில் நடைபெறும் பாஜக இளம் தாமரை மாநாட்டில் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகியோர் பங்கேற்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

தமிழக பா.ஜ.க சார்பில் இளந் தாமரை மாநாடு அடுத்தமாதம் நடைபெறுகிறது . இதற்கான இடத்தை தேர்வுசெய்ய தமிழக பா. ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று திருச்சிவந்தார். திருச்சியில் பஞ்சப்பூர், மன்னார்புரம் ராணுவமைதானம், ஜி.கார்னர் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். அதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

பா.ஜ.க இளைஞர் அணி இளந் தாமரை மாநாடு செப்டம்பர் 26–ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்தமாநாட்டில் 50 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் உள்பட 1 லட்சம்பேர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு கோவையில் நடத்த முதலில் முடிவுசெய்து இருந்தோம். அங்கு இடத்தை பொருட் காட்சி நடத்த முன்பதிவு செய்துவிட்டதால் சென்னை அல்லது திருச்சியில் மாநாட்டை நடத்த முடிவுசெய்து இடத்தை தேர்வுசெய்து நாளை அல்லது நாளை மறுநாள் மாநாடு நடைபெறும் இடத்தை அறிவிப்போம்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக இடத்தை மாற்றி விட்டோம் என்பது சரியல்ல. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என நான் கூறமாட்டேன். ஒருஅரசு பொதுமக்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பாக இருக்கமுடியுமோ அந்த அளவிற்கு பாதுகாப்புகொடுக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் அரசு பெண்கள்மானத்தை காப்பாற்ற முடியாததற்காகவும் தேசத்தை அவமானப்படுத்தும் அரசாகவும் இருந்துவருகிறது. வருகிறதேர்தலில் காங்கிரசை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் நரேந்திர மோடியை பிரதமராக்க விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஓட்டுவங்கி 10 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் நாட்டில் பா. ஜ.க அமைக்கும் கூட்டணியை மக்கள் ஆதரிப்பார்கள். மற்றகட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டதை போல பாராளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டால் பா.ஜ.க.,வும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என தமிழ் நாட்டில் முதன் முதலில் வலியுறுத்தியது பா.ஜ.க.,தான். இந்தியா சார்பில் யாரும் பங்கேற்ககூடாது. என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...