ஆவணி மாதம் பக்தி மாதம்

 "ஆடியிலே காத்தடிச்சா..ஆவணியில் தண்ணி வரும்.. "—இந்த பழமொழியில், "தண்ணி" என்பது மழையை குறிக்கும்..

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது மட்டுமல்ல…ஆவணி பிறந்தாலும், கல்யாணங்களுக்கு வழி பிறக்கும்..நிறைய சுப முஹுர்த்தங்கள், நிறைந்த மாதம் ஆவணி..

மங்களம் நிறைந்த வரலட்சுமியை, மங்கலம் நிறைந்த மங்கையர் பூசை செய்து, தாலி பாக்கியம் நீடிக்கவும், கணவன் ஆயுள் நீடிக்கவும், செய்யப்படும் விரதங்கள் நிறைந்த பண்டிகை மாதம் இந்த மாதம்…

ஆண்களுக்கான ஒரே பண்டிகை ரிக்,யஜுர்..ஆவணி அவிட்டம். முப்புரி நூல் என்னும் பூணூல் மாற்றும் நாள் . அடுத்தநாள் காயத்திரி ஜபம்…ஆண்களுக்கு உயர்ந்த கல்வி, ஆயுள், செல்வம், குழந்தைகளின் எதிர்காலம், என அனைத்தையும்,அள்ளித்தரும், பண்டிகை…".ஆண் குழந்தைகளின் மனதில் கள்ளம் புகுமுன் காயத்திரி புகவேண்டும்"—என ஏழு வயதிலேயே..முப்புரி நூல் எனப்படும் பூணூல் போட்டு, வேதங்களில், உயர்ந்த காயத்ரியை மனதிலேயே பதிய வைத்து, விடுவர்..இதை "பிரம்மோபதேசம்" எனபர்…

வட்டத்திற்கு எட்டாம் நாள் அஷ்டமி என்பர்….வட்டம் என்பது ஆவணியா வட்டம்..அஷ்டமி என்பது கோகுலாஷ்டமியை குறிக்கும்..கண்ணன் பிறந்த நாள்..அதில் வைகானச,முனித்ரய, மற்றும் ஸ்ரீவைஷ்ணவ, பாஞ்சராத்ர, ( ஸ்ரீ ரெங்க கோயில் கண்னபிரான் )ஜன்மாஷ்டமி என்னும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியும்,மறுநாள் உரியடி உற்சவமும், உண்மையிலேயே குழந்தைகளையும், பெரியவர்களையும், குதுகூலப்படுத்தும்…

ஆவணிச் செவ்வாயில் வரும் கார்த்திகை திருநாள் விரதம், முருகனுக்கு உகந்தது..மாதா மாதம் வினாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வரும்..ஆகையால் இந்த மாதம் வரும் "மஹாசங்கடஹர சதுர்த்தி", மிக விஷேஷமாக வீடுகளிலும், கோவில்களிலும், கொண்டாடப்படும்..சங்கடங்களை எல்லாம் தீர்ப்பவரல்லவா வினாயகப்பெருமான்…

அடுத்து வினாயகச் சதுர்த்தி..உலகிற்கே பொதுவான கடவுள் வினாயகர்..அவரை முழுமுதற் கடவுள் எனவும், அவ்வையாரை மேலுலகிற்கு அழைத்துச் சென்றவர் எனவும், முருகனுக்கு மூத்தவரான இவர், வியாசர் சொல்ல மகாபாரதத்தையே எழுதியவர் எனவும், கூறப்படுகிறார்.

புதுமனை புகுவிழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழா என எதுவானாலும், எந்த மாதமானாலும், "கணபதி ஹோமம்" கட்டாயம் உண்டு…இந்துக்களில், ஜாதிபேதமின்றி வினாயகர் படம் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்..

வினாயகர் சதுர்த்திக்காக மிகப்பெரிய வினாயகர் விகிரகங்களை வடிவமைத்து, 10 நாட்கள் கொண்டாட்டத்திற்கு பிறகு, நீர்நிலைகளிலும், கடலிலும், கொண்டு விசர்ஜனம்..( கரைத்தல் )செய்வர்,,

"கணபதி பப்பா மோரியா" என வடநாட்டவர் அவரை கொண்டாடி…பெரிய திருவிழா எடுக்கின்றனர்..திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார், ..மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முக்குருணி பிள்ளையார்..காரைக்குடி—பிள்ளையார் பட்டி கற்பகவினாயகர்…கோவையில் ஈச்சனாரி வினாயகர் மற்றும் புலியகுளம் வினாயகர்..ஆகியோர் மிகப்பெரிய உருவத்துடன் பிரசித்தி பெற்றவர்கள்..

வீடுகளில் களிமண்ணால் ஆன குட்டி பிள்ளையார் முதல் பெரிய பிள்ளையார் வரை, அவரவர் வசதிக்கு ஏற்ப குடை, எருக்கம் பூமாலை, சின்னக்குடையுடன் வாங்கி வந்து, பெரிய கோலமிட்டு மரப்பலகையில் அமர்த்தி, அப்பம் பொரி கடலை, குடுமி கொழுக்கட்டை, இட்டிலி பாயசம் என பலகாரங்களும், வாழை, மா, பலா, பேரி, நாவல்பழம், என இந்த மாதத்தில் கிடைக்கும் அனித்து பழவகைகளையும் படைப்பர்..

எல்லா குளக்கரையிலும் அமர்ந்திருந்து, குழந்தைகளுக்கு பரிட்சை சமயம், மனதில் ஒரு வலுவான நம்பிக்கை ஊட்டுபவர் வினாயகர்..அதற்கான காணிக்கை நன்றியுடன் ஒரு சூறைத்தேங்காய் மட்டுமே..

களிமண் விக்கிரகம் , பழங்கள் , பூக்கள், இருப்பிடம் என அனைத்துமே இயற்கைதான்..ஆகவே இவரை " இயற்கையின் கடவுள் " என க்கூறலாம்..

ஜாதிமத பேதமே இல்லாமல் வணங்கப்படுபவர் இவர்..இந்த மாதத்தில் தான் ஸ்ரீரெங்கத்தில் " திரு பவித்திர உற்சவம் " ஆரம்பம்.

இந்த மாதத்திதான் ஏசுவின் தாயார் தேவமாதா பிறந்த தினம் கிருஸ்துவ மக்களால், கொண்டாடப்படுகிறது..

நமது தேசிய கவி பாரதியார் சுதந்திர தாகத்தை, கவிதைகள், பாட்டுக்கள், கதைகள், பத்திரிக்கைகள் மூலம், தட்டி எழுப்பினார்..அவரின் நினைவுநாள் இம்மாதமே வருகிறது ..அதனால் தான் நாம் இன்று சுதந்திரதினத்தை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்..

ஆவணியின் கடைசி நாளான திருவோண நாள் " திரு ஓணம் " பண்டிகை..ஆணவம் கொண்ட அரசன் மஹாபலியை திருமால் வாமனாவதாரம் எடுத்து, பாளம் –பூமி—ஆகாயம்—என மூவுலகத்தையும், மூவடியால் அளந்து, மகாபலியை ஆட்கொண்ட நாள்..கேரளாவின் முக்கிய பண்டிகை

இது..பெண்கள் மிக அழகாக பூக்கொலம் போட்டு, " கை கொட்டிகளி" ( கும்ம்பி ) இட்டு—கொண்டாடுவர்..

கொண்டாட்டங்களும் பண்டிகைகளும், மக்கள் மனதில் அன்பையும் ஒற்றுமையையும், வளர்க்கவே பெரியோர்களால், வகுக்கப்பட்டது, நாமும் இந்த பண்பாட்டை , கலாச்சாரத்தை, நம் சந்ததிகளுக்கு சொல்லித்தரலாமே..
ஆம் "ஆவணி–ஒரு அழகான பக்தி மாதம் "

நன்றி; ரேவதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...