டெல்லியில் பா.ஜ.க.,வின் தலைமையகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டுக்கான பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார்.
ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ”பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படுவார்” என்றார்.
இந்த அறிவிப்பையடுத்து நரேந்திரமோடிக்கு ராஜ்நாத்சிங், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்கள் அருண்ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு, அனந்த்குமார், சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர்ஜோஷி ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்துத்தெரிவித்தனர். அப்போது ஜோஷியின் காலில்விழுந்து மோடி ஆசிபெற்றார்.
பார்லி., குழுகூட்டம் நடக்கும் கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் பா.ஜ.க., மற்றும் ஆர்எஸ்எஸ்., தொண்டர்கள் கூட்டம், கூட்டமாககூடி நின்றனர். மோடி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மேள, தாளங்கள் இசைத்து , பட்டாசுகளை வெடித்து கர கோஷங்கள் எழுப்பி உற்சாககமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.