வரும்தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்பதையே இந்த கூட்டம் காட்டுகிறது

 தமிழகத்தில் இவ்வளவுபெரிய மக்கள் கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. வரும்தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்பதை இங்கு திரண்டுள்ள மக்கள்வெள்ளம் உறுதிப்படுத்துகிறது என்று பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் வியாழக் கிழமை நடைபெற்ற பா.ஜ.க இளந்தாமரை மாநாட்டில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் இவ்வளவுபெரிய மக்கள் கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை. வரும்தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்பதை இங்கு திரண்டுள்ள மக்கள்வெள்ளம் உறுதிப்படுத்துகிறது. 2010 முதல் 2030 வரை இந்தியாவில் 24கோடி இளைஞர்கள் புதிதாக உருவாக இருக்கிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல்கட்சிகள் இவர்களை வாக்குவங்கிகளாக மட்டும் பார்க்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க, இளைஞர்கள் சக்தியை நாட்டின் சொத்தாக பார்க்கிறது. இந்தஇளைஞர் சக்தியை பயன்படுத்தி நாட்டை வல்லரசாக்கவேண்டும். அந்தப்பணியை செய்யும் வல்லவர் என்பதால் தான் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்.

பா.ஜ.க தொண்டர்கள் உடனடியாக தேர்தல் பணியை தொடங்கவேண்டும். இஙகுவந்துள்ள இளைஞர்கள் தங்களதுபெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவேண்டும். மற்றவர்களை சேர்க்கச்செய்ய வேண்டும். அப்போது தான் நாம் விரும்பும்மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

வாஜ்பாய் ஆட்சியில் 1998 முதல் 2004வரை நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறுதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 6 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் 6.70 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2010வரை காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 27லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன.

வாஜ்பாய் ஆட்சியில் விலைவாசிகட்டுக்குள் இருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது.

மக்களிடம் பயத்தை ஏற்படுத்த பா.ஜ.க விரும்பவில்லை. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி ஆட்சியைப்பிடிக்க விரும்புகிறோம். அதற்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

பிரதமர் மன்மோகன்சிங், தனது அரசின்தோல்வியை மறைப்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்குவதாக பா.ஜ.க மீது குற்றம் சாட்டியுள்ளார். அரசின் குறைகளை சுட்டிக்காட்டவே பா.ஜ.க.,வை எதிர்க் கட்சி வரிசையில் மக்கள் அமரவைத்துள்ளனர். அந்த கடமையை நாங்கள் நிறை வேற்றுகிறோம்.

நாடுமுழுவதும் நரேந்திரமோடி அலை வீசுவதாக கூறுகிறார்கள். ஆனால், நாடெங்கும் மோடி சூறாவளி வீசிக்கொண்டிருக்கிறது. அவர் கண்டிப்பாக நாட்டின் பிரதமராகவருவார்.

மோடியின் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது சிபிஐ. மூலம் வழக்குதொடர்கிறது காங்கிரஸ் அரசுமோடி தனிநபர் அல்ல. அவர்பின்னால் நாட்டு மக்கள் உள்ளனர் என எச்சரிக்க விரும்புகிறேன்.

இலங்கையில் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். சமீபத்தில் நடைபெற்ற இலங்கை வடக்குமாகாண தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழத் தேசிய கூட்டமைப்புக்கும், அதன் தலைவர் விக்னேஸ் வரனுக்கு வாழ்த்துக்கள் என்றார் ராஜ்நாத்சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...