மாட்டுத்தீவன ஊழல்வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் சிறைக்குப் போனதால் மத்திய பிரதேச மாநில ராஷ்டிரிய ஜனதாதளம் பாஜக வுடன் இணைந்தது.
தீவன ஊழல்வழக்கில் லாலுவை குற்றவாளி என்று ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ம. பி மாநில ராஷ்டிரிய ஜனதா தள கட்சி பா.ஜ.க வுடன் இணைந்துள்ளது.
மாநில ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் சஞ்சய்பாபுலால் சிலாவத் மற்றும் முன்னணி தலைவர்கள் ம.பி. பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நரேந்திரசிங் டோமரை சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சஞ்சய் பாபுலால் சிலாவத், ஒவ்வொருதேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என லாலுபிரசாத் யாதவ் கூறிவந்தார். எங்களுக்கு கட்சியில் எந்தசுதந்திரமும் இல்லை. மத்தியபிரதேச மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தவும் முடியவில்லை. கடந்த 15 ஆண்டு காலமாக பொறுத்துப் பார்த்து விட்டோம். அதனாலேயே பாஜக வில் இணைய முடிவெடுத்தோம் என்றார்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.