எங்களுடைய மதத்துக்கு எதிராக செயல்படுவர்கள் தான் எங்களின் இலக்கு

 எங்களுடைய மதத்துக்கு எதிராக செயல்படுவர்கள் தான் எங்களின் இலக்கு தீவிரவாதி போலீஸ் பக்ருதீனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் அவனது கூட்டாளிகள் குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்து முன்னணி செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட இந்து இயக்க தலைவர்கள் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த அல் உம்மா தீவிரவாதி போலீஸ் பக்ருதீன். கடந்த வாரம் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் நாசவேலையில் ஈடுபடுவதற்கு சதி திட்டத்தில் ஈடுபட்டபோது இவன் போலீசில் பிடிபட்டான்.

பக்ருதீன் கொடுத்த தகவலின் பேரில், ஆந்திர மாநிலம், புத்தூரில் பதுங்கி இருந்த பிலால் மாலிக் நீண்ட நேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு உயிருடன் பிடிபட்டான். மற்றொரு தீவிரவாதியான பன்னா இஸ்மாயில் குண்டு காயத்துடன் பிடிபட்டான்.

தொடர்ந்து போலீஸ் பக்ருதீனுடம் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக பக்ருதின் அளித்துள்ளான். அதில் தமிழகத்தில் பா.ஜ.க., இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், பக்ரூதீன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 'எங்களது திட்டத்தின்படி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், வேலூரில் வெள்ளையப்பன், மதுரையில் பால்காரர் சுரேஷ் 6 பேரை தீர்த்துக் கட்டியுள்ளோம். எங்களது பட்டியலில் இந்து முன்னணி மாநில தலைவர் ராமகோபாலன் மற்றும் சென்னையில் பிரபலமான பிரமுகர் ஒருவரும் இடம் பெற்றிருந்தனர். இது தவிர திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த இந்து இயக்க தலைவர்கள் இருவரை கொலை செய்வதற்கும் திட்டமிட்டிருந்தோம்.

எங்களுடைய மதத்துக்கு எதிராக செயல்படுவர்கள் தான் எங்களின் இலக்கு. குடும்பம் மற்றும் உறவுகளை விட மதம்தான் எங்களுக்கு முக்கியம். இந்த கோட்பாட்டின் படியே 3 பேரும் செயல்பட்டு வந்தோம்.

நாங்கள் வைத்த குறிக்கு 6 பேர் பலியாகி விட்ட நிலையில், 4 பேர் உயிர் தப்பி விட்டனர்' எனத் பக்ருதீன் தெரிவித்திருந்தான். பக்ருதீனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பல தீவிரவாதிகள் அவனது தொடர்பில் இருந்ததும், அவர்கள் பல நாச வேலைகள் செய்யத் திட்டமிருந்ததும் அம்பலமாகியுள்ளது. எனவே, பக்ருதீனிடமிருந்து கைப்பற்றப் பட்ட அவனது செல்போனிலிருந்து அவனது கூட்டாளிகள் பற்றிய விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...