தசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்டமுண்டனை வதம்செய்த நன்னாள் விஜய தசமி. அந்நாளில் ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும்பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
ஸ்ரீதுர்கா தேவி
விஜய தசமி என்பதற்கு மற்றொருபொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பதுநாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம்தேடி, பத்தாம் நாளான தசமியன்று ஸ்ரீ அன்னை விஜயம்செய்யும் நாளே ‘விஜய தசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம்தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப்பெரிய சிறப்பு.
அன்று தான் ராவணா சுரனை ஸ்ரீராமன் வதம்செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றிகூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள்போரிட்ட ஆயுதங்களை முன்வைத்து வழிபாடு செய்தநன்னாளும் இதுவே!
இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந்நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்பு பெற்றதாகிறது. ஆம், இந்நன்னாளில் தான் மகாஅவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகாசமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள் ஜீவசமாதி கொண்டதினமும் இதுவே!
Tags; dasara, vijayadashami, தசரா பண்டிகை வரலாறு,துர்கா தேவி, நவராத்திரி, நவராத்திரி நோன்பு, விஜய தசமி,விஜயதசமி, விஜயதசமி அன்று, விஜயதசமி என்றால் என்ன
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.