பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான் மகிஷன் என்னும் அசுரன், அவனது தவத்தில் மனம் குளிர்ந்த பிரம்மா அவன் முன்பு தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் , தனக்கு அழிவு என்பது நேரக்கூடாது அப்படி அழிவு நேர்ந்தால் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழவேண்டும் என்ற வரத்தை பெற்றான்.
தனக்கு அழிவேகிடையாது என்ற ஆணவம் கொண்டு பல அட்டூழியங்களை செய்தான் . தேவலோகத்தின் மீது
போர்தொடுத்து தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். தேவர்களின் துன்பம்தீர்க்க எண்ணிய தேவி, உக்ர ரூபம் கொண்டாள். மும் மூர்த்திகளும் தங்கள் அம்சத்தை அவளுக்கு தந்து உதவினர்.
மகிஷனுடன் பராசக்தி கடும் போரிட்டாள். சூலத்தை வீசி அவனை கொன்றாள். மகிஷனை வதம்செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்கிற பெயரை பெற்றாள். அந்த வெற்றி திருநாளையே விஜய தசமியாகக் கொண்டாடுகிறோம். இந் நாளில் அம்பாள் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.