நிலக்கரிசுரங்க முறைகேடு தொடர்பாக பிரதமரையும் ஒருசதியாளராக சேர்க்கவேண்டும் என்று இத்துறையின் முன்னாள் செயலாளர் பிசி. பரேக் கூறியதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலகவேண்டும் என பாஜக உயர்த்தியுள்ளனது,
இதுதொடர்பாக பாஜக.,வின் மேலிட பிரதிநிதி பிரகாஷ்ஜவடேகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது,
நிலக்கரி சுரங்கமுறைகேடு தொடர்பாக பிசி. பரேக் கூறிய கருத்தை பாஜக முழுமையாக ஆதரிக்கிறது. ஒருநேர்மையான அதிகாரி மீது எப்ஐஆர் போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஊழலுக்கு முழுபொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங்தான் பதவி விலகவேண்டும். காரணம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏலம்விட வேண்டும் என்ற யோசனையை பிரதமர் பின்பற்றி இருப்பாரேயானால் இந்த ஊழலே நடந்திருக்காது. ஆனால் அவர்அப்படி செய்யவில்லை. அதனால் தான் அவரை ஒருசதியாளராக சேர்க்கவேண்டும் என்கிறார் பரேக். அவரதுகருத்து வரவேற்கத்தக்கது. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், இந்த விவகாரத்தில் கையெழுத்து போட்டிருப்பவர் பிரதமர் மன்மோகன் சிங். எனவே இதற்கு இறுதிபொறுப்பேற்று பிரதமர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று கோரினார். இதே போல் மற்ற தலைவர்களும் கோரிக்கை விடுத்திருப்பதால் பிரதமருக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.