நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுதொடர்பாக சி.பி.ஐ மேற்கொண்டுவரும் விசாரணையில் இருந்து பிரதமர் மன்மோகனசிங்கை மட்டும் ஒதுக்கிவிட முடியாது. அமைச்சகத்தின் முறையான அதிகாரம்பெற்று இருந்தவர் என்பதால் அவர் இதற்கு பொறுப்பேற்கத் தான் வேண்டும் என பாஜக தலைவர் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித்துறை செயலர் பி.சி. பரேக் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதன் மூலம், முதலீட்டாளர்களும், அரசு அதிகாரிகள் மட்டுமே முறைகேடுகள்தொடர்பாக விசாரணைக்கு உள்படுத்தப்படுவார்கள், பொறுப்பில் உள்ளவர்கள் ( நிலக்கரி துறையை தன்வசம் வைத்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்) சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற ஓர்தவறான சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது.
அலைக் கற்றை,நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுபோன்ற ஊழல்கள் ஐ.மு. கூட்டணி அரசின் சாயத்தை வெளுக்க வைத்து விட்டன. இந்த ஊழல் (நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் மோசமான ஒருசமிக்ஞையை அனுப்பப் போகிறது.
சுரங்க ஒதுக்கீட்டை பரிந்துரைசெய்யும் ஓர் அரசு செயலர் மீது சி.பி.ஐ.,யால் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது; ஆனால், அதை அமல்படுத்த உத்தரவிடும் அமைச்சர் விசாரணை வளையத்திற்குள் சேர்க்கப்படாதது ஏன்என்று புரியவில்லை.
பி.சி. பரேக், பரிந்துரைசெய்யும் அதிகாரம்மட்டுமே படைத்தவர். ஆனால், அதை அமல்படுத்தும் அதிகாரம்படைத்த அமைச்சர் (பிரதமர் மன்மோகன்சிங்) விசாரணைக்கு உள்பட்டே ஆகவேண்டும் குமார் மங்கலம் பிர்லா ஓர் அனுபவமிக்க தொழிலதிபர் , பி.சி. பரேக் ஒருநேர்மையான அரசு அதிகாரி. இவர்கள் இருவர்மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதன் மூலம் தவறான சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.
முதலாவது, இந்தியாவில் முதலீடுசெய்யும் முதலீட்டாளர்களின் திட்டங்கள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் புலன்விசாரணை அமைப்புகளால் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, நிறுவனத்தின் தலைவர்மீது குற்ற வழக்கு பதிவுசெய்யப்படும்.
இரண்டாவது, அரசு அதிகாரிகள்மட்டுமே முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும், அரசியல்வாதிகள் இதற்கு பொறுப்பேற்க மாட்டார்கள் .இதன் ஒட்டுமொத்த விளைவு வெளிநாட்டுமுதலீடுகள் குறைந்து போவதோடு, உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாடுகளை நோக்கிச் சென்று விடுவார்கள். இது முதலீடுகளுக்கு உகந்தசூழல் அல்ல என்றார் ஜேட்லி.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.