இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனதலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:–
ஒரு தமிழ் தொலைக் காட்சியில் இந்திய ஜனநாயக கட்சி பாட்டாளி மக்கள்கட்சியோடு இணைந்து பாராளுமன்ற தேர்தலில், 'சமூக ஜனநாயக கூட்டணி' என்றபெயரில் தேர்தலில் போட்டியிடுவதாக செய்திவந்துள்ளது.
ஏற்கனவே நாங்கள் பா.ஜ.க.,வோடு கூட்டணிவைத்து, புதுக்கோட்டை இடைத்தேர்தலை சந்தித்தோம், இன்றும் நாங்கள் அக்கட்சியோடுதொடர்ந்து எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லாமல் இயங்கி வருகிறோம்.
பாட்டாளி மக்களின் சமுதாயஅமைப்பு தொடங்கியுள்ள சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பில் பார்க்கவகுல முன்னேற்ற சங்கம் தொடர்பு வைத்து கொண்டுள்ளது. இதற்குகாரணம் வன்கொடுமை தடுப்புசட்டத்தில் சிலமாற்றங்களை அரசு கொண்டுவரவேண்டும்.
அப்போதுதான் நாம் நிம்மதியாக இருக்கமுடியும் என்ற கருத்தை மற்ற எல்லா சமுதாயமும் வலியுறுத்தும் போது அதோடு இணைந்து பார்க்கவகுல முன்னேற்ற சங்கமும் வலியுறுத்திவருகிறது.
இன்றைய சூழ்நிலையில் ஐஜேகே. என்ற எங்கள் அரசியல் அமைப்புக்கும், பாட்டாளிமக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்புக்கும் எந்ததொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
2014–ம் ஆண்டு ஜனவரி கடைசியில் திருச்சியில் எங்கள்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. அப்போது அங்கு எடுக்கும் தேர்தல்கூட்டணி முடிவே நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.