தொடர் குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் இன்று பாட்னாவில்நடந்த பா.ஜ.க கூட்டத்தி்ல பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது முதல்வர் நிதீஷ்குமார், தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு விலகியது குறித்து அவர் விமர்சித்தார்.
பீகாரின் வரலாறு, பாரதத்தின்வரலாறாகும். இதுசாதாரண கூட்டம் அல்ல. நாட்டின் பெரும்பலத்தை வெளிக்காட்டும் கூட்டமாகும். இந்தியாவின் வரலாற்றில் இரண்டுபெரும் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஒன்று சம்பரனில் நடந்த சத்தியாக் கிரகம். இன்னொன்று குஜராத்தின் தண்டியில்நடந்த உப்புயாத்திரை.
பீகார் நாட்டை எப்போதுமே வழிநடத்தியுள்ளது. புத்தர், மகாவீரர், குரு கோவிந்த்சிங், ஜெயப்பிரகாஷ் நாராயணன் என பலதலைவர்களை அது கொடுத்துள்ளது. பீகார் முதல்வர் எனது அருமை நண்பர். அவர் எங்களைவிட்டு போனது குறித்து பலர் என்னிடம்கேட்டனர். அதற்கு நான்சொன்னேன், ஜெபியை (ஜெயப்பிரகாஷ் நாராயணனை) விட்டே விலகியவர்கள் பா.ஜ.க.,வை தூக்கிஎறிவது எளிதானதுதானே என்றேன். பீகார் பலநல்ல தலைவர்களைத் தந்துள்ளது – சில விதிவிலக்குகளை தவிர.
ராம்மனோகர் லோஹியாவின் சிஷ்யர்கள் என தங்களைக் கருதிக்கொள்வோம், எங்களை முதுகில் குத்திவிட்டனர். அவர்கள் காங்கிரஸுடன் தற்போது இருக்கிறார்கள். இவர்களதுசெயலை ஜெபியும், லோஹியாவும் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள். 2006ம் ஆண்டு எனது நண்பரும், உங்களது முதல்வரும், குஜராத்துக்கு ஒருதிருமணத்திற்காக வந்திருந்தார். நானும் அங்கிருந்தேன்.
அவருக்கு முழு உபச்சாரமும் நாங்கள்செய்தோம்.ஆனால் இன்று உங்களது முதல்வர் எங்களை ஏமாற்றிவிட்டார். பா.ஜ.க.,வை மட்டுமல்ல கோடிக் கணக்கான பீகார் மக்களையும் ஏமாற்றிவிட்டார். எனது நண்பர், இப்போது பிரதமர் பதவிகுறித்து கனவுடன் உள்ளார். பீகாரில் எனது நண்பரை முதல்வராக்கியதே பா.ஜ.க.,தான். பாஜகவின் பெருந்தன்மையால் தான் அவர் முதல்வரானார். அவர் எனது சிறந்தநண்பராக இருந்தபோது அவருடன் முதல்வர்கள் மாநாட்டில் நான் பழகியுள்ளேன். அப்போது அவர் என்னுடன் அருகில்அமரவே விரும்பவில்லை.
சுற்றிலும் கேமராக்கள் இல்லை. தைரியமாகஅமருங்கள் என்று நான்கூறினேன். காங்கிரஸிடமிருந்து நாட்டை நாம்மீட்டாக வேண்டும்.காங்கிரஸ் அல்லாத நாட்டை உருவாக்கவேண்டும். நான் நேற்று டிவியைப் பார்த்த போது நான் சொன்ன ஷாஷாதா என்ற வார்த்தை காங்கிரஸ்நண்பர்களை ரொம்பவே தர்மசங்கடப் படுத்தியிருப்பதை உணரமுடிந்தது.
காங்கிரஸ் கட்சி தனது வாரிசுஅரசியலை கைவிட்டும், நானும் ஷாஷாதா என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்துகிறேன். நாட்டின் ஜனநாயகத்திற்கு இந்தவாரிசு அரசியல்தான் மிகப்பெரிய எதிரியாகும். நமது எதிரிகள் யார்.. சாதியம், மதவாத அரசியல், சந்தர்ப்பவாதம் ஆகியவை தான். பீகாரில் அரசியல் இந்த அத்தனை காரணிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது, அசுத்தமாகியுள்ளது. ஆட்சிக்குவந்து 100 நாட்களுக்குள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கூறியது.
ஆனால் 10 வருடங்களாகியும் அதை அவர்கள் செய்தார்களா…? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக காங்கிரஸ் கூறியது. ஏதாவது செய்தார்களா….? ரயிலில் டீ விற்கும் சாதாரண குடிமகனுக்குக் கூடத்தெரியும், நாட்டின் பிரச்சினைகள் குறித்து. ஆனால் ரயில்வே அமைச்சருக்கு அதுதெரியாது. நாட்டு மக்களின் பிரச்சினைகளை நான் நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன்.
நாட்டின் ஒற்றுமையை சாணக்கியர் வலியுறுத்தினார். ஆனால் இன்றுநாம் அதை பிளவு படுத்திக் கொண்டிருக்கிறோம். பீகார் ஐக்கிய ஜனதாதள அமைச்சர் ஒருவர், நமது ராணுவத்தினர் சாவதற்காகவே ராணுவத்தில் சேருவதாக கூறினார். இப்படி ஒரு அவமானத்தை உங்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடிந்தது..
இங்கு இன்று நடந்தது சாதாரணகூட்டம் அல்ல. வரலாறு படைக்கும் கூட்டம் மட்டும் அல்ல, இந்தியாவின் பெரும்பலத்தைக் காட்டக்கூடிய கூட்டம். இன்னும் 200 நாட்கள்தான் இருக்கின்றன. நீங்கள் காட்டப்போகும் ஆதரவை நாங்கள் அன்புடன் திருப்பிக் கொடுப்போம். பீகாரில் ஹஜ்யாத்திரைக்கான விண்ணப்பங்களை 7500 முஸ்லீம்கள்தான் கொடுத்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் ஏழைகள். வறுமை கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள். ஆனால் குஜராத்தில், 4500 இடங்களுக்கு 40,000 பேர் கொடுத்துள்ளனர். காரணம், குஜராத்தில் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாகவாழ்கின்றனர் என்றார்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.