அமெரிக்காவின் ஜெர்சிநகரில் உள்ள நியூயார்க் அவென்யூவில் ராஜ்போக் ஸ்வீட் ஸ்டோர்' என்ற வடநாட்டு இனிப்புபலகார கடையை நடத்திவருபவர், அரவிந்த் பட்டேல்.
குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடியின் தீவிர ஆதரவாளரான இவர் மோடி ஆட்சியின் 11வது ஆண்டு நிறைவுவிழவை கொண்டாடும் வகையில் 11 வகை பேடா இனிப்புகளை இலவசமாக வழங்கிஅசத்தினார்.
தற்போது, தீபாவளியையொட்டி 'மோடி மேஜிக்நம்கீன்' என்ற பெயரால் மிக்சர் மற்றும் 'சேவ்' வகைகளை தயாரித்துள்ள அரவிந்த்பட்டேல், இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் முடியும்வரை அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்துபண்டிகைகள் மற்றும் பாஜக. சார்பில் நடத்தப்படும் கட்சிநிகழ்ச்சிகள் ஆகியவற்றின் போது 10 லட்சம்மோடி மேஜிக் நம்கீன் பாக்கெட்களை இலவசமாக வழங்க முடிவுசெய்துள்ளார்.
45 சென்ட்கள் என விலையிடப்பட்டுள்ள 10லட்சம் பாக்கெட்களை இலவசமாக வழங்க 45 ஆயிரம் டாலர்கள் செலவாகுமே..? என கேட்டதற்கு, அதைவிட கூடுதலாக செலவிடவும் தயார் என்று அவர் கூறுகிறார்.
இந்த நம்கீன்மிக்சர் அமெரிக்காவில் வசிக்கும் மோடி ஆதரவாளர்களிடம் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. மோடியின் அரசியலைபோலவே இந்த நம்கீனும் காட்டமாக உள்ளது என சிலர்தெரிவித்தனர்.
'இந்திய அரசியல்வாதி ஒருவரின்பெயர் அமெரிக்காவில் 'பிராண்ட்நேம்' (வணிக குறியீட்டுப் பெயர்) ஆனதை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.மோடி மேஜிக் என்பது இந்தியாவில் மட்டுமல்ல.. உலகம்முழுவதும் 'ஒர்க் அவுட்' ஆவதை உணர்கிறேன்' என ஒரு வாடிக்கையாளர் தெரிவித்தார்.
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.