காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிதொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், காஷ்மீர் பிரிவினை வாதிகளை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிப்பின் அறிவுரையாளர் சர்தார் அஜிஸுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது . இதற்கு பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
நியூயார்க் சந்திப்பின் போது, பாகிஸ்தானிடமிருந்து அமைதியை வாங்க ஐ.மு.கூட்டணி அரசு தவறியது. தற்போது காஷ்மீர் பிரிவினைவாதிகளை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமரின் அறிவுரையாளர் சர்தார் அஜிஸிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தான் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வன்முறையை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் போது, அந்நாட்டின் அறிவுரையாளர் அஜிஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது ஏன்?. இது பன்னாட்டு ராஜாங்க விதிமுறைகளுக்கு எதிரான வெளிப்படையான செயல்படாகும்.
சர்தாஜ் அஜிஸை காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் பேச அனுமதித்து நாட்டின்நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மிகப் பெரும் தீங்கிழைக்கும் தவற்றை ஐ.மு., கூட்டணி அரசு செய்துள்ளது.
எனவே இந்திய மண்ணில் நடக்கப்போகும் இந்தபேச்சுவார்த்தை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டு பிரச்சினையான இது உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும்.
கடந்த சிலவருடங்களாக காஷ்மீர் பிரச்சினையை உலகளவில் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. சமீபத்தில், ஐநா. சபையிலும் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் கிளப்பியது.
காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தானின் கொள்கைகளை ஐ.மு.,கூட்டணி அரசு இங்கு செயல்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.