அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிகட்சிக்கு Avaaz.org என்ற அமைப்பிடம் இருந்து 4 லட்சம் அமெரிக்க டாலரை நிதியாக பெற்றதாகவும். இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தினால் தான் சட்டமீறல்கள் அம்பலமாகும் என்றும் பாஜக.,வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிகட்சி டெல்லி மாநில சட்ட சபை தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் கட்சி தொடங்கிய சிலமாதங்களிலேயே பல கோடிகளை அந்த கட்சி செலவுசெய்து வருகிறது. ஊழலுக்கு எதிரான கட்சி என காட்சிதரும் இவர்கள் பெரும்பாலும் நிதி பெறுவது அந்நிய நாடுகளிடம் இருந்தே. எதிர்காலத்தில் இவர்கள் செய்ய இருக்கும் ஊழலுக்கு முன்பணமாக கூட இருக்கலாம்
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கான பணம் எங்கிருந்துவருகிறது என்பது குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தர விட்டது. இந்தவிவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, www.avaaz.org/en/ என்ற அமைப்பு மூலமாகவே ஆம் ஆத்மிகட்சிக்கு பணம் வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக 4 லட்சம் டாலர் பணம் ஆம் ஆத்மிகட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பு அரபு நாட்டினருக்கும் உதவிசெய்திருக்கிறது. இந்த அமைப்பு சமூக கிளர்ச்சிகளுக்கே நிதிஉதவி செய்திருக்கிறது. பாஜக.,வை பார்த்து அச்சப்படுகிற காங்கிரஸ் கட்சியின் இன்னொரு முகமாக ஆம் ஆத்மிகட்சி செயல்படுகிறது.
13 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பணம்பெற்றதாக கெஜ்ரிவால் கூறுகிறார். ஆனால் யார்யாரிடம் இருந்து பணம்பெற்றதாக அவர் தெரிவிக்கவில்லை. ஒரேவாரத்தில் 19 கோடி ரூபாயை வசூலிப்பது சாத்தியம் இல்லை. அமெரிக்க குடியுரிமைபெற்ற ஒருவர் தான் ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்றார்
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.