மோடி வருகை பெங்களூருவில் வரலாறுகாணாத பாதுகாப்பு

 பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாஜக ஏற்பாடுசெய்துள்ள பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பாஜக.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதைதொடர்ந்து, பெங்களூருவில் வரலாறுகாணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக பா.ஜ.க.,வின் சார்பில் பெங்களூரு, அரண்மனை மைதானத்தில்காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல்வரும், பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 60 ஏக்கர்பரப்பில் நடக்கும் இக்கூட்டத்தில் 5 லட்சம் பா.ஜ.க தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

40 அடி அகலம், 80அடி நீளம், 16அடி உயரத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. 10 ரயில்கள், 2500 பேருந்துகளில் தொண்டர்கள் வருகை தரவுள்ளனர். 40 தொலைக் காட்சி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுக்கூட்ட வளாகத்தில் தீப்பெட்டி, நீர்பாட்டில், பட்டாசு போன்ற பொருள்கள் கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 10 டி.சி.பி.,க்கள், 25 ஏசிபிக்கள், 10 ஆய்வாளர்கள், 250 துணை ஆய்வாளர்கள், 300 உதவி ஆய்வாளர்கள், 3 ஆயிரம்காவலர்கள், 800 ஊர்க்காவல் படையினர், 500 சிவில்போலீஸôர் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்ட வளாகத்தில் குண்டு வெடித்ததால் பெங்களூருவில் முன்னெச்சரிக்கையுடன் வரலாறுகாணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தில் ஆங்காங்கே சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 10 நாள்களாக மைதானத்தை போலீஸ்கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...