‘பீகாரில், கடந்த ஐந்துமாதங்களில், சட்டம் – ஒழுங்கு நிலைமை மிகவும் மோசம் அடைந்து உள்ளதாக முன்னாள் துணை முதல்வர், சுஷில்குமார் மோடி குற்றம் சுமத்தியுள்ளார். .
பீகாரில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான, கூட்டணி அரசில், பாஜக., அங்கம் வகித்திருந்தது. ஐந்து மாதங்களுக்கு முன், பாஜக., பிரதமர்வேட்பாளராக, நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த கூட்டணி முடிவுக்குவந்தது. ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்துகொண்ட பின், முதல்முறையாக, பா.ஜ.க, நிதிஷ் தலைமையிலான அரசின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை குறிக்கும் அறிக்கையை, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வெளியிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது: கூட்டணியிலிருந்து, பாஜக., விலகிய பின், ஆட்சி நிர்வாகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு நிலை மோசம் அடைந்துள்ளது. வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகளின் வன்முறையும், குற்றசம்பவங்களும் அதிகரித்துள்ளன. வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து, கண்காணிப்பு மற்றும் ஆய்வில், நிதிஷ் அரசு அக்கறைகாட்டவில்லை. என்று , அவர் கூறினார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.